திருச்சியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்பி திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் முக்கிய பாலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து திருச்சி எம்பி துரை வைகோ இன்று (25.08.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இப்பால பணிகள் பல்வேறு காரணங்களால் ஆரம்பகட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன பின்னர் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக ஜூன் 2024-ல் பொறுப்பேற்றது முதல், இப்பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் தொடர்ந்து பேசி, நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, பணிகளை விரைவுபடுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், இன்று மேற்கொண்ட ஆய்வின்போது ஒவ்வொரு பாலத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் நிறைவு காலக்கெடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதில் 1. NH பழைய காவிரி பாலம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 25.06.2026 அன்று போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்பட்டது. தற்போது பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அக்டோபர் 2026 இரண்டாவது வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2. மாரிஸ் ரயில்வே மேம்பாலம் (ROB) மாரிஸ் ROB-இன் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்காக மார்ச் 2024-ல் பாலம் மூடப்பட்டது. பின்னர் எம்பி துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக ஜூன் 2024-ல் பொறுப்பேற்ற பின்னர், நாளிதழ்கள் வாயிலாக பழைய பாலத்தை அகற்றும் பணியில் ஏற்பட்டிருந்த தொய்வு குறித்து அறிந்து, ஜனவரி 2025-ல் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பாலப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, அப்போதைய ரயில்வே கோட்ட மேலாளரிடமும் இதுகுறித்து வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, பழைய பாலத்தை அகற்றும் பணி மார்ச் 2025-ல் நிறைவடைந்தது. ரயில்வே ஒப்பந்ததாரரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பணித் தாமதம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடமும் நேரில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் பாலத்தின் பணிகள் மட்டுமின்றி, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாலப் பணிகளின் முன்னேற்றத்தையும் வாரந்தோறும் கண்காணித்து வருகின்றனர். ரயில்வே பகுதி பணிகள் ஜூலை 2026 கடைசி வாரத்திற்குள் நிறைவடையும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒப்பந்ததாரரின் தாமதம் காரணமாக மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அந்தப் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு, பாலம் அமைப்பதற்குத் தேவையான fabricated materials தளத்திற்கு வந்துள்ளன. ரயில்வே பகுதியின் launching பணி செப்டம்பர் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அணுகுச்சாலை உள்ளிட்ட மாநகராட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முழுப் பணியும் அக்டோபர் 2026 இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3. டவுன் ஸ்டேஷன் ROB-க்கான Work Order ஆகஸ்ட் 2022-ல் வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கட்டுமானப் பணிகள் ஜனவரி 2025-ல் தொடங்கின. இதனிடையில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்பின்மையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து எம்பி நேரில் சென்று பணிகளைப் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆகஸ்ட் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4. கிராபட்டி சாலையில், எடமலைப்பட்டிபுதூர் மற்றும் பஞ்சப்பூர் அருகே அமைந்துள்ள கோரையாறு பாலத்தின் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி, 03.04.2026 அன்று பழைய பாலம் முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டதன் மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கோரையாறு பாலத்தின் பணிகள் ஜனவரி 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5. அரிஸ்டோ Phase-II ரயில்வே மேம்பாலப் பணிகள் மார்ச் 2024-ல் தொடங்கின. சிலிண்டர் பற்றாக்குறை, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேர்தல் பணிகளுக்காக தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றது உள்ளிட்ட காரணங்களாலும், சில நிர்வாக ரீதியான தாமதங்களாலும் ஆரம்பத்தில் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது திருத்தப்பட்ட காலக்கெடுவின்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையின் பகுதி பணிகள் உறுதியளிக்கப்பட்டபடி நிறைவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 2026 மத்தியில் launching பணி மேற்கொள்ளப்பட்டது.இனி மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெற்று, முழுப் பணியும் டிசம்பர் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இப்பாலங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தரமான முறையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்பி திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் முக்கிய பாலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து திருச்சி எம்பி துரை வைகோ இன்று (25.08.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இப்பால பணிகள் பல்வேறு காரணங்களால் ஆரம்பகட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன பின்னர் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக ஜூன் 2024-ல் பொறுப்பேற்றது முதல், இப்பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் தொடர்ந்து பேசி, நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, பணிகளை விரைவுபடுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், இன்று மேற்கொண்ட ஆய்வின்போது ஒவ்வொரு பாலத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் நிறைவு காலக்கெடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதில் 1. NH பழைய காவிரி பாலம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 25.06.2026 அன்று போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்பட்டது. தற்போது பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அக்டோபர் 2026 இரண்டாவது வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2. மாரிஸ் ரயில்வே மேம்பாலம்
(ROB) மாரிஸ் ROB-இன் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்காக மார்ச் 2024-ல் பாலம் மூடப்பட்டது. பின்னர் எம்பி துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக ஜூன் 2024-ல் பொறுப்பேற்ற பின்னர், நாளிதழ்கள் வாயிலாக பழைய பாலத்தை அகற்றும் பணியில் ஏற்பட்டிருந்த தொய்வு குறித்து அறிந்து, ஜனவரி 2025-ல் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பாலப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, அப்போதைய ரயில்வே கோட்ட மேலாளரிடமும் இதுகுறித்து வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, பழைய பாலத்தை அகற்றும் பணி மார்ச் 2025-ல் நிறைவடைந்தது. ரயில்வே ஒப்பந்ததாரரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பணித் தாமதம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடமும் நேரில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் பாலத்தின் பணிகள் மட்டுமின்றி, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாலப் பணிகளின் முன்னேற்றத்தையும் வாரந்தோறும் கண்காணித்து வருகின்றனர். ரயில்வே பகுதி பணிகள் ஜூலை 2026 கடைசி வாரத்திற்குள் நிறைவடையும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒப்பந்ததாரரின் தாமதம்
காரணமாக மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அந்தப் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு, பாலம் அமைப்பதற்குத் தேவையான fabricated materials தளத்திற்கு வந்துள்ளன. ரயில்வே பகுதியின் launching பணி செப்டம்பர் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அணுகுச்சாலை உள்ளிட்ட மாநகராட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முழுப் பணியும் அக்டோபர் 2026 இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3. டவுன் ஸ்டேஷன் ROB-க்கான Work Order ஆகஸ்ட் 2022-ல் வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கட்டுமானப் பணிகள் ஜனவரி 2025-ல் தொடங்கின. இதனிடையில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்பின்மையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து எம்பி நேரில் சென்று பணிகளைப் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆகஸ்ட் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4. கிராபட்டி சாலையில், எடமலைப்பட்டிபுதூர் மற்றும் பஞ்சப்பூர் அருகே அமைந்துள்ள கோரையாறு பாலத்தின் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி, 03.04.2026
அன்று பழைய பாலம் முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டதன் மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கோரையாறு பாலத்தின் பணிகள் ஜனவரி 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5. அரிஸ்டோ Phase-II ரயில்வே மேம்பாலப் பணிகள் மார்ச் 2024-ல் தொடங்கின. சிலிண்டர் பற்றாக்குறை, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேர்தல் பணிகளுக்காக தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றது உள்ளிட்ட காரணங்களாலும், சில நிர்வாக ரீதியான தாமதங்களாலும் ஆரம்பத்தில் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது திருத்தப்பட்ட காலக்கெடுவின்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையின் பகுதி பணிகள் உறுதியளிக்கப்பட்டபடி நிறைவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 2026 மத்தியில் launching பணி மேற்கொள்ளப்பட்டது.இனி மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெற்று, முழுப் பணியும் டிசம்பர் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இப்பாலங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தரமான முறையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- हेडलाइन: गंगा बैराज हाईवे पर मिला अज्ञात व्यक्ति का शव, नवाबगंज पुलिस जांच में जुटी कानपुर नगर के नवाबगंज थाना क्षेत्र स्थित गंगा बैराज हाईवे पर मंगलवार सुबह एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में हड़कंप मच गया हाईवे से गुजर रहे राहगीरों ने सड़क किनारे शव पड़ा देखा और पुलिस को सूचना दी सूचना मिलते ही नवाबगंज थाना पुलिस टीम मौके पर पहुंची पुलिस ने घटनास्थल को सुरक्षित कर आसपास के लोगों से पूछताछ की मौके पर कई पुलिसकर्मी मौजूद रहे और मामले की छानबीन करते नजर आए पुलिस के अनुसार, मृतक की उम्र लगभग 35-40 वर्ष के आसपास लग रही है और उसकी अभी तक शिनाख्त नहीं हो सकी है शव को कब्जे में लेकर पंचनामा भर पोस्टमार्टम के लिए भेज दिया गया है थाना प्रभारी ने बताया कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का पता चल सकेगा फिलहाल आसपास के थानों में गुमशुदा लोगों के बारे में जानकारी जुटाई जा रही है और शव की पहचान कराने का प्रयास किया जा रहा है पुलिस मामले की हर एंगल से जांच कर रही है3
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1