Shuru
Apke Nagar Ki App…
சேலம் கெங்கவல்லி பகுதியில் அதிமுக வேட்பாளர் தோசை சுட்டு வாக்கு கேட்டார் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அதிமுக சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி இன்று செந்தாரப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது ஹோட்டல் கடையில் தோசை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு கேட்டார் அருகில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதிமுகவின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்
Selva
சேலம் கெங்கவல்லி பகுதியில் அதிமுக வேட்பாளர் தோசை சுட்டு வாக்கு கேட்டார் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அதிமுக சட்டமன்ற வேட்பாளர் நல்லதம்பி இன்று செந்தாரப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது ஹோட்டல் கடையில் தோசை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு கேட்டார் அருகில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதிமுகவின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் அம்மாபேட்டை ராமலிங்க சுவாமி தெருவில், 43 ஆம் ஆண்டு காவிரி திருவிழா இன்று அப்பகுதியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து சுப்பிரமணியர் கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் கோவில் தலைவர் ஜெயமணி, சௌந்தரராஜன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.1
- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.1
- பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்... 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தூர் பகுதியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... இதனைத் தொடர்ந்து சீமான் தலைமையிலான ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். மேலும் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் முடியும் என்று கூறி வாக்கு சேகரித்தார்...1
- திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.1
- திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முக்கிய நிகழ்வுகள்: திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்: திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.1
- கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, பழைய பேட்டை மற்றும் லைன் கொல்லை ஆகிய பகுதிகளில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்அசோக்குமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.1
- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1