முதலமைச்சர் குமரி வருகை குமரிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் - முழுமையான பயண விவரம் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். * இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 24-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரும் முதல்வர், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவை (Ayyan Thiruvalluvar Silver Jubilee Arch) திறந்து வைக்கிறார். * அதனைத் தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளை பகுதிக்குச் செல்லும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள 'முதல்வர் படிப்பகத்தை' (Mudalvar Padippagam) திறந்து வைத்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையையும் திறந்து வைக்கிறார். * பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள சர்.சி.பி. இராமசாமி ஐயர் நினைவுப் பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் அவர்களின் சிலையையும் முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். * முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் நாகர்கோவிலில் தங்கும் முதல்வர், மறுநாள் பிப்ரவரி 25-ம் தேதி நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் (Concordia Ground) நடைபெறும் பிரம்மாண்டமான அரசு விழாவில் கலந்துகொள்கிறார். * இவ்விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டங்களைப் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். * முதல்வரின் இந்த வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

- சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி: மாநகராட்சி பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பக்கிள் ஓடையில் கேரி பைகளையும் குப்பைகளையும் நேரிடையாகவும் சாக்குபைகளில் உள்ளே வைத்து மறைமுகமாகவும் போடுவதை தவிர்க்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள். மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மேயர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது திருவிளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் புதிதாக 278 சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் மே மாதத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவடையும் மாநகராட்சி வக்கீல் ஓடையில் பொதுமக்கள் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது அவற்றை சிறிய சாக்கு பைகளில் வைத்து கேரிப்பை உள்ளே வைத்து போடுகின்றனர் இதை தவிர்க்க வேண்டும் பத்தில்வோடையானது வரும் காலத்தில் மழை பெய்தால் மட்டும் மலை வெள்ள நீர் செல்வதற்காக வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது மற்ற நேரங்களில் பாதாள சாக்கடை மூலமாக மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் முழுமையான உண்மையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்1
- (18-2-2026) புதன் #சோதிடம் #ராசிபலன்இன்று #கிரகபலன் #நட்சத்திரம் #maatramworld #tamil #god1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்1
- Post by Saba Saba1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை. செல்வன் பெர்னாண்டோ நிறைவேற்றினார். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 29ஆம் தேதி குருதோலை ஞாயிறு அதனைத் தொடர்ந்து. ஏப்ரல் 02-04-26ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும். ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 05-04-26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தேவ ஆலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1