logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முசிறியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக சச்சிதானந்தம் பொறுப்பேற்பு. முசிறியில் புதிய காவல்துறை துணைகண்காணிப்பாளர் பணி பொறுப்பேற்றுள்ளார். முசிறி காவல்துறைதுணை கண்காணிப்பாளராக சச்சிதானந்தம் பணி பொறுப்பேற்றுள்ளார்.இவர் இதற்கு முன்பு சென்னை கொடுங்கையூர் பகுதியில் டி எஸ் பி யாக பணியாற்றியவர் பணி மாறுதல் காரணமாக முசிறி போலீஸ் டிஎஸ்பியாக பணி பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் முசிறியில் டிஎஸ்பி ஆக பணியாற்றிய முத்துக்குமார், திருச்சி குற்றத்தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணி பொறுப் பேற்றுள்ளார். பனிப் பொறுப்பேற்றுள்ள டி எஸ் பி சச்சிதானந்தம் திருச்சி எஸ் பி மற்றும் உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் முசிறி கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக பொறுப்பேற்ற டி எஸ் பி ஐ மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை பெற்றனர்.

6 hrs ago
user_நா. முருகன்
நா. முருகன்
முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
6 hrs ago
07f1f066-6cdd-4a0d-9505-c8e1350a43fc

முசிறியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக சச்சிதானந்தம் பொறுப்பேற்பு. முசிறியில் புதிய காவல்துறை துணைகண்காணிப்பாளர் பணி பொறுப்பேற்றுள்ளார். முசிறி காவல்துறைதுணை கண்காணிப்பாளராக சச்சிதானந்தம் பணி பொறுப்பேற்றுள்ளார்.இவர் இதற்கு முன்பு சென்னை கொடுங்கையூர் பகுதியில் டி எஸ் பி யாக பணியாற்றியவர் பணி மாறுதல் காரணமாக முசிறி போலீஸ் டிஎஸ்பியாக பணி பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் முசிறியில் டிஎஸ்பி ஆக பணியாற்றிய முத்துக்குமார், திருச்சி குற்றத்தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணி பொறுப் பேற்றுள்ளார். பனிப் பொறுப்பேற்றுள்ள டி எஸ் பி சச்சிதானந்தம் திருச்சி எஸ் பி மற்றும் உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் முசிறி கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக பொறுப்பேற்ற டி எஸ் பி ஐ மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை பெற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது
    1
    அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது
புதுக்கோட்டை. 
விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது 
புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் 
தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர்
இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    1
    சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் 
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    7 hrs ago
  • கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
    1
    கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே  வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. 
இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு 
வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து
செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் 
பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து  குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Dr A. SUBETHAR
    Dr A. SUBETHAR
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.