logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இலவச மருத்துவ முகாம் கிளை மேலாளர் ஜெயகுமார் பங்கேற்பு.. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் (TNSTC) பணிமனையில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பழனி போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர் திரு. ஜெயக்குமார் தலைமை தாங்கி, மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். இம்முகாமில் பணிமனை ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டன. மேலும், பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. நிகழ்வின் நிறைவில், பணிமனை ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இம்முகாமில் மருத்துவக் குழுவினர், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு பயனடைந்தனர்..

5 hrs ago
user_Abbas Abbas
Abbas Abbas
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
5 hrs ago
ad6b99af-e856-4536-b57d-9a446b215287

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இலவச மருத்துவ முகாம் கிளை மேலாளர் ஜெயகுமார் பங்கேற்பு.. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் (TNSTC) பணிமனையில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பழனி போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர் திரு. ஜெயக்குமார் தலைமை தாங்கி, மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். இம்முகாமில் பணிமனை ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டன. மேலும், பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. நிகழ்வின் நிறைவில், பணிமனை ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இம்முகாமில் மருத்துவக் குழுவினர், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு பயனடைந்தனர்..

More news from தமிழ்நாடு and nearby areas
  • குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள்
சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    1
    விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    2
    ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். 
இக்கண்திருஸ்டி கணபதி
இராஜகணபதியாய்  சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. 
இன்று கணபதிக்கு  சிறப்புபூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. ​மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ​ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். ​பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். ​இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
    1
    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது.
​மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
​ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர்.
​பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார்.
​இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ​ தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
​
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். 
தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்  வராக நதியில் சிலைகள் கரைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. 
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால்  சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன்  அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன.
அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர்  நல்லு தலைமையில், 18 காவல்  ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    1
    கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது.
காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 
கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    1
    மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்   சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள்  சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.