logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ₹180 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்க, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் 'சத்தம் இல்லாத சக்கர வியூக' அதிரடி களப்பணியைத் தொடங்கியுள்ளார். பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் திருடப்பட்டு வந்த இந்த சிவன் சொத்துக்களை மீட்கும் இந்த அதிரடி நடவடிக்கை, பகல் கொள்ளையில் ஈடுபட்ட அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரத்தை ஆட்டிப்படைத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 30 ஆண்டுகால பகல் கொள்ளை அம்பலமாகியுள்ளது. ஏழைகளை 'ஆக்கிரமிப்பாளர்கள்' என்று கூறி அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெளியேற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள், மறுபுறம் செல்வாக்கு மிக்க பணக்காரர்களுடன் கைகோர்த்துக்கொண்டு கோயில் நிலங்களைத் தாரை வார்த்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு ₹1.5 கோடி முதல் ₹2.5 கோடி வரை வருவாய் இழப்பும், கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ₹15 கோடி வாடகை பாக்கியும் குவிந்துள்ளது. மேலும், ₹180 கோடி மதிப்புள்ள சுமார் 18 ஏக்கர் கோயில் நிலங்கள் (12 ஏக்கர் ஆக்கிரமிப்பு மற்றும் 6 ஏக்கர் பட்டா மாற்றம்) தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, நரேந்திர வித்யாலயா பள்ளி, ஆசிரியர் குடியிருப்புகள், சாரதா நகர், பணியாளர் குடியிருப்புகள், கனரா வங்கி, அஞ்சலகம் மற்றும் வணிக ரீதியிலான கட்டிடங்கள் எனப் பல பெயர்களில் இந்த கோயில் சொத்துக்கள் சுருட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளின் இந்த இருட்டடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஜூலை 11, 2026 முதல் திருவரங்கம் வட்டத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கியுள்ளன. கோயில் நிலங்களைச் சட்டப்பிரிவு 78-ன் கீழ் மீட்கவும், முறையான வாடகை வசூலிக்கவும் சிறப்பு நில சர்வேயர்கள் தீவிரமாகப் பணியமர்த்தப்பட்டு கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை காலமும் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளுக்கு, இந்த சிறப்பு சர்வேயர்களின் அதிரடி களமிறக்கம் 'திருடனுக்குத் தேள்/நட்டுவாக்கிளி கொட்டிய கதையாக' மாறியுள்ளது. கோயிலின் சொத்துக்களைத் தன் கையில் பதுக்கி வைத்திருந்த கயவர்களின் கோட்டை சரிந்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் அமைச்சரின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றனர். அதே நேரத்தில், மீட்கப்படும் இந்த நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்குமா அல்லது இதுவும் வெறும் கண்துடைப்பு நாடகமாக முடிந்துவிடுமா என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சரின் இந்தச் சக்கர வியூகம் கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக மாறுமா அல்லது அதிகாரிகளின் தந்திரங்களில் மீண்டும் சிக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

6 hrs ago
user_Shankar subramanian
Shankar subramanian
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
6 hrs ago
4ea9da48-882e-4cfb-b800-37556eebba07

திருவரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ₹180 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்க, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் 'சத்தம் இல்லாத சக்கர வியூக' அதிரடி களப்பணியைத் தொடங்கியுள்ளார். பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் திருடப்பட்டு வந்த இந்த சிவன் சொத்துக்களை மீட்கும் இந்த அதிரடி நடவடிக்கை, பகல் கொள்ளையில் ஈடுபட்ட அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரத்தை ஆட்டிப்படைத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 30 ஆண்டுகால பகல் கொள்ளை அம்பலமாகியுள்ளது. ஏழைகளை 'ஆக்கிரமிப்பாளர்கள்' என்று கூறி அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெளியேற்றிய

c1d17b5d-feb6-4f4b-8ee7-049e723ec19a

அறநிலையத்துறை அதிகாரிகள், மறுபுறம் செல்வாக்கு மிக்க பணக்காரர்களுடன் கைகோர்த்துக்கொண்டு கோயில் நிலங்களைத் தாரை வார்த்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு ₹1.5 கோடி முதல் ₹2.5 கோடி வரை வருவாய் இழப்பும், கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ₹15 கோடி வாடகை பாக்கியும் குவிந்துள்ளது. மேலும், ₹180 கோடி மதிப்புள்ள சுமார் 18 ஏக்கர் கோயில் நிலங்கள் (12 ஏக்கர் ஆக்கிரமிப்பு மற்றும் 6 ஏக்கர் பட்டா மாற்றம்) தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, நரேந்திர வித்யாலயா பள்ளி, ஆசிரியர் குடியிருப்புகள், சாரதா நகர், பணியாளர்

22a01001-d108-4135-9252-f32d57e82a91

குடியிருப்புகள், கனரா வங்கி, அஞ்சலகம் மற்றும் வணிக ரீதியிலான கட்டிடங்கள் எனப் பல பெயர்களில் இந்த கோயில் சொத்துக்கள் சுருட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளின் இந்த இருட்டடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஜூலை 11, 2026 முதல் திருவரங்கம் வட்டத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கியுள்ளன. கோயில் நிலங்களைச் சட்டப்பிரிவு 78-ன் கீழ் மீட்கவும், முறையான வாடகை வசூலிக்கவும் சிறப்பு நில சர்வேயர்கள் தீவிரமாகப் பணியமர்த்தப்பட்டு கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை காலமும் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளுக்கு, இந்த சிறப்பு சர்வேயர்களின் அதிரடி களமிறக்கம் 'திருடனுக்குத் தேள்/நட்டுவாக்கிளி

20d88d33-6156-4934-82f5-045604b70871

கொட்டிய கதையாக' மாறியுள்ளது. கோயிலின் சொத்துக்களைத் தன் கையில் பதுக்கி வைத்திருந்த கயவர்களின் கோட்டை சரிந்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் அமைச்சரின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றனர். அதே நேரத்தில், மீட்கப்படும் இந்த நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்குமா அல்லது இதுவும் வெறும் கண்துடைப்பு நாடகமாக முடிந்துவிடுமா என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சரின் இந்தச் சக்கர வியூகம் கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக மாறுமா அல்லது அதிகாரிகளின் தந்திரங்களில் மீண்டும் சிக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுபுதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்கள் விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த விற்பனையில் ஜிலேபி, நண்டு மற்றும் கடல் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனையாகின. காட்டுபுதூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அசைவப்பிரியர்கள் திரண்டு வந்து, தங்களுக்குத் தேவையான மீன்களை மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் காட்டுப்புத்தூர் பகுதியில் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டிய வட்டம் காட்டுபுதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்கள் விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த விற்பனையில் ஜிலேபி, நண்டு மற்றும் கடல் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனையாகின.

காட்டுபுதூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அசைவப்பிரியர்கள் திரண்டு வந்து, தங்களுக்குத் தேவையான மீன்களை மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் காட்டுப்புத்தூர் பகுதியில் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
    user_Kumar kumar
    Kumar kumar
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    1
    திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    user_Mohanraj
    Mohanraj
    Home help Musiri, Tiruchirappalli•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து கடைக்கு பூட்டு போட்டு சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • குளத்தை தூர்வார வேண்டும் வேலிக்கிரவு மரங்களை வெட்ட வேண்டும்
    1
    குளத்தை தூர்வார வேண்டும் வேலிக்கிரவு மரங்களை வெட்ட வேண்டும்
    user_தமிழ் எடிசன்
    தமிழ் எடிசன்
    திருவையாறு, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    user_க. சுந்தரேசன்
    க. சுந்தரேசன்
    தொட்டியம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்து மற்றும் திருமயம் தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் இன்று புதுக்கோட்டை மாவட்ட தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, புதுக்கோட்டையில் அமைச்சரைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து மற்றும் தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.
    1
    கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்து மற்றும் திருமயம் தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் இன்று புதுக்கோட்டை மாவட்ட தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸை நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் போது, புதுக்கோட்டையில் அமைச்சரைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பி.கே.வைரமுத்து மற்றும் தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முசிறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜனின் தந்தை கடந்த மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, காடுவெட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மையநாதன் நேரில் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது, காட்டுப்புத்தூர் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், அரசலூர் முருகன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பெரியண்ணன், பழனிவேல், திருப்பதி உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முசிறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜனின் தந்தை கடந்த மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, காடுவெட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மையநாதன் நேரில் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின் போது, காட்டுப்புத்தூர் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், அரசலூர் முருகன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பெரியண்ணன், பழனிவேல், திருப்பதி உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Kumar kumar
    Kumar kumar
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா V. இடையப்பட்டி பஞ்சாயத்து கோவில்பட்டியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சுமார் 1000 பள்ளி குழந்தைகள் தினமும் பயன்படுத்தி வரும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பரவலாக மழை பெய்தவுடன், மழை நீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாத காரணத்தால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அவல நிலை குறித்து அறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    2
    திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா V. இடையப்பட்டி பஞ்சாயத்து கோவில்பட்டியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சுமார் 1000 பள்ளி குழந்தைகள் தினமும் பயன்படுத்தி வரும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பரவலாக மழை பெய்தவுடன், மழை நீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாத காரணத்தால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த அவல நிலை குறித்து அறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    46 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.