logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதம்! இஸ்ரேல் ஏன் பின்வாங்கவில்லை!! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'அமைதி சபை' (Board of Peace) திட்டத்திற்கு ஹமாஸ் போராளிகள் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், இருதரப்பு அரசியல் சூழல் மற்றும் கள நிலவரங்கள் காரணமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை புதிய பாலஸ்தீன நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காசாவின் 70%வீதப் பகுதிகளில் இருந்து படைகளை படிப்படியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் காஸாவில் செயற்;படும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் களையும் வரை, காஸாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இஸ்ரேல் தனது "அனைத்துவகைத் தாக்குதல்களையும் நிறுத்தி" படைகளை முழுமையாகத் திரும்பப் பெற்றால் மட்டுமே தாங்கள் கனரக ஆயுதங்களை ஒப்படைப்போம் என ஹமாஸ் அமைப்பு பதிலளித்துள்ளது. தங்களது தன்னாட்சி உரிமை மற்றும் சுதந்திரமான பாலஸ்தீன தனிநாடு அமைப்பதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலிய தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது. பாலஸ்தீன மக்களின் பேரழிவு தரும் மனிதநேய நெருக்கடியைக் கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை நோக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த அமைதித் திட்ட வரைவை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் (Itamar Ben Gvir) "ஏற்க முடியாத ஒன்று" என்று மூகூறி நிராகரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு தனது வரலாற்றிலேயே ஆயுதங்களைக் களைய ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறையாகும். காஸாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கடுமையான துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். யுனிசெஃப் அமைப்பின் தரவுகளின்படி, 2023 அக்டோபர் 7 முதல் இதுவரை 20,000 க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குறைந்தது 1,000 குழந்தைகள் கைக்குழந்தைகள் உள்ளடங்கியுள்ளனர். இந்தநிலையில் அமைதி குழு, தலைவர்களுக்கு முன்னால் உள்ள அரசியல் அழுத்தங்களும் என்ற அடிப்படையில் கருத்துக்களும் வெளியாகியுள்ளன. எதிர்வரும் அக்டோபர் இறுதியில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியுள்ள நெதன்யாகு, தனது அரசியல் வாழ்வைக் காப்பாற்றவும், தன் மீதான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் போராடி வருகிறார். ஹமாஸிற்கு நெகிழ்வுத்தன்மை காட்டுவதாக உள்நாட்டில் விமர்சனம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அதேவேளையில், அமெரிக்காவின் அழுத்தத்தையும் சமாளிக்க வேண்டிய சூழலில் உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பொறுத்தவரையில் எதிர்வரும் நவம்பரில் அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காசா விவகாரத்தில் ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். ஹமாஸின் தற்போதைய நிலையை பொறுத்தவரையில், அமைப்பின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். புதிய அரசியல் தலைவரான கலீல் அல் ஹய்யா எகிப்து மற்றும் துருக்கி நாடுகளின் தீவிர ராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகே இந்த திட்டத்துக்கு உடன்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் சமூக மற்றும் நிவாரணப் பணிகள் மூலம் பாலஸ்தீன மக்களிடையே தனது ஆதரவை மீண்டும் கட்டமைக்க ஹமாஸ் முயன்று வருகிறது. 2026 ஆம் ஆண்டானது கடந்த பத்தாண்டுகளில் மேற்குக்கரையில் பதிவான மிக மோசமான வன்முறை ஆண்டாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், தீவிர மத தேசியவாதியான இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் போன்றவர்கள் பாலஸ்தீன தனிநாடு உருவாவதை முற்றிலும் எதிர்த்து வருகின்றனர். எனினும், பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமையையும் தெளிவான அரசியல் எதிர்காலத்தையும் வழங்காத எந்தவொரு அமைதி முயற்சியும் நிலைத்திருக்காது என அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2 hrs ago
user_KS. RAFEEQ
KS. RAFEEQ
Media Consultant அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
2 hrs ago
ad529e81-12de-4f64-9144-6465c8b1b23f

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை முழுவதும் வனத்துறைக்கு கட்டுப்பாட்டு கீழ் வந்த அதை அடுத்து நேற்று மதியம் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்து மணிமுத்தாறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    1
    நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு 
நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை முழுவதும் வனத்துறைக்கு கட்டுப்பாட்டு கீழ் வந்த அதை அடுத்து நேற்று மதியம் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்து மணிமுத்தாறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சேகர 30வது தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவிற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்தார் வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் கொடியேற்றி துவக்கி வைத்தார் சுரண்டை சீயோன் சேகர தலைவர் அருள்திரு ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சேகர 30வது தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவிற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்தார் வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் கொடியேற்றி துவக்கி வைத்தார் சுரண்டை சீயோன் சேகர தலைவர் அருள்திரு ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு! அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    2
    அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில் செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம், வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    3
    கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில்  செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம்,  வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில்  இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    1
    பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
*விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த  விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ 
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி  மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    16 min ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது
    2
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது 
நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் 
நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து  பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு  ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து 

பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு 

ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.