logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பங்குனி உத்திர திருவிழா திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகன்-வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், மாலை திருஆவினன்குடி கோவிலில் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவடி சுமந்தும், கொடுமுடி தீர்த்தம் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்

2 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago
d4a74842-4ca2-4ec2-b6c5-bc51d8dc95c6

பங்குனி உத்திர திருவிழா திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகன்-வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், மாலை திருஆவினன்குடி கோவிலில் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவடி சுமந்தும், கொடுமுடி தீர்த்தம் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும்
பால்வாடி அருகில் உள்ள  செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால்
குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு  
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் 
ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி
திறந்து கிடந்த செப்டிக்  டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர்.
ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
    1
    வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே  தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை    சேதப்படுத்தி நின்றது  விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    8 hrs ago
  • ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .
    1
    ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
சிங்கமுக  வாகனத்தில்  எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு
10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து
சாமி சரிசனம் செய்த பக்தர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு 
பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய  வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார்.
.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் லால்குடி தொகுதியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஜனநாயக புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் லால்குடி தொகுதியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஜனநாயக புலிகள் அமைப்பின் நிர்வாகிகள்  உடனிருந்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள்  தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார்.
இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள்  கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    21 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு திடீரென வன்முறையாக மாறி, அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தகராறு திடீரென வன்முறையாக மாறி,
அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில்,
மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது
விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து,
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    3 hrs ago
  • *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    1
    *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், 
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் 
சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த  இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் 
கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது 
தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் 
இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    1
    போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா.
300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில்.
இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.