Shuru
Apke Nagar Ki App…
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் குரு வார பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் பிரதோஷ நாயகர் நாயகிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வலம் வர, திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சு.இரத்தினவேல்
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் குரு வார பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் பிரதோஷ நாயகர் நாயகிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வலம் வர, திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகவதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வாயில் வேல் அழகு குத்தியும், பால்குடம் ஏந்தியும் ஊர்வலமாக வந்த பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்த விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலின் 29 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பூக்குழி இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீச்சட்டி ஏந்தியும், காவடி எடுத்தும், பூக்குழியில் இறங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.1
- பட்டிவீரன்பட்டி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய பகீர் சிசிடிவி காட்சி வெளியானது. விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பட்டிவீரன்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.1
- வாழ்வில் நாம் சந்திக்கும் சண்டைகள் பிரிவை நோக்கியவை அல்ல, மாறாக ஒன்றிணைந்து வாழ்வதற்கானவை. இந்தச் சிந்தனை வாழ்க்கையின் சவால்களை புதிய கோணத்தில் அணுக வழிவகுக்கிறது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை கால பைரவர் கோவிலில் அமைச்சர் பிரபு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரான அவர், புதிய அமைச்சராகப் பதவியேற்ற பிறகு தனது பணி சிறக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் பத்தாம் நாள் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனையடுத்து, திருவீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன; இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.1
- மதுரை கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் கிராம விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்திய போதிலும், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.1
- ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது. ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு கிலோ கஞ்சா பறிமுதல். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வடுகபட்டி அருகே உள்ள பெரியகுளம் புறவழிச் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். மேலும் அவர்களை மரித்து சந்தேகிக்கும் படியாக இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களின் உடைமைகள் பையை சோதனை செய்த பொழுது அவற்றில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களையும் கைது செய்த தென்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் நான்கு சிறுவர்களை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்று கஞ்சா வாங்கியதாகவும், வாங்கிய எட்டு கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக சென்னை வந்து அதன் பின் சென்னையில் இருந்து தேனி சென்ற அரசு விரைவு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் எட்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்2
- இந்த விளக்கத்தில் சபாநாயகரின் பதவி, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மையமாக இருக்கும் சபாநாயகரின் ஆளுமையும் பொறுப்பும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.1