Shuru
Apke Nagar Ki App…
*🚨 கரூரில் பேருந்து இயக்கத்தில் முக்கிய மாற்றம்! 🚌* 📢 ஆகஸ்ட் 4 முதல் புதிய நடைமுறை! கரூரில் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு! 🔹 வழித்தடம் 1, 4, 9 – வேலூர், வாங்கல், திருமுக்கூடலூர் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கம். 🔹 லைட் ஹவுஸ் – அமராவதி ஆற்றுப்பாலம் – திருமாநிலையூர் ரவுண்டானா வரை ஒரு வழிப்பாதையாக மட்டும் பேருந்துகள் அனுமதி. 🔹 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பேருந்துகள் சுக்காலியூர், பைபாஸ் வழியாக இயக்கம். 🔹 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு TNSTC சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 📅 04.08.2026 முதல் அமல்! ⚠️ பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!
R. Suresh
*🚨 கரூரில் பேருந்து இயக்கத்தில் முக்கிய மாற்றம்! 🚌* 📢 ஆகஸ்ட் 4 முதல் புதிய நடைமுறை! கரூரில் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு! 🔹 வழித்தடம் 1, 4, 9 – வேலூர், வாங்கல், திருமுக்கூடலூர் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கம். 🔹 லைட் ஹவுஸ் – அமராவதி ஆற்றுப்பாலம் – திருமாநிலையூர் ரவுண்டானா வரை ஒரு வழிப்பாதையாக மட்டும் பேருந்துகள் அனுமதி. 🔹 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பேருந்துகள் சுக்காலியூர், பைபாஸ் வழியாக இயக்கம். 🔹 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு TNSTC சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 📅 04.08.2026 முதல் அமல்! ⚠️ பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!
More news from தமிழ்நாடு and nearby areas
- ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் கே. ராமர் திருவுருவபட திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பையா பங்கேற்பு. ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் தலித் கே.ராமர் நினைவேந்தல் திருவுருவ படத்திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பைய்யா பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் தலித்.கே.ராமர் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் அசுரன் என்ற மகுடீஸ்வரன், தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர்.ச.கருப்பைய்யா கலந்துகொண்டு தலித் இயக்க மாநில செயலாளர் தலித் கே ராமர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 28 ந்தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் நிலமீட்பு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலித் கதிர் காமன், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணிச் செயலாளர் பீமா ராவ் தமிழ் புலிகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் சின்னகருப்பன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் மனேகரன்,இந்தியதேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பிச்சை முத்து, த.தீ.ஒ.மு மாவட்ட தலைவர் முத்துசாமி, தேவேந்திர மறுமலர்ச்சி பேரவை பகத்சிங் பழனிசாமி, ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை தலித் கே. சுப்பிரமணியன், தமிழ் தேச மக்கள் முன்னணி காளிமுத்து, விசிக இளஞ்சிறுத்தைகள் பேரவை மாவட்ட செயலாளர் வடிவேல்,உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் தலித் விடுதலை இயக்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராசேந்திரன் நன்றி தெரிவித்தார்.2
- எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது. முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள். அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது. அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- மீனவர் பிரச்சனை குறித்து தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-- வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார். *தமிழக மீனவர்களை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.1
- திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை. திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும். வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்! சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.1
- ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மீண்டும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு-* *அதிகாரிகள் நேரில் ஆய்வு, காவல்துறையினர் விசாரணை திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இயங்கி வரும் மோர் மிளகாய் நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 28/07/2026 மூன்று நாட்களுக்கு முன்பு அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், விவசாய நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் அதே பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உடனடியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்தார். இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மோர் மிளகாய் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீராமபுரம் பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை மீது அப்பகுதி மக்களின் கவனம் திரும்பியுள்ளது..1