logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பிரபல தென்னிந்திய பாடகியான எஸ் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் இன்று காலமானார். தனது 88வது வயதில் அவர் காலமானார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரை இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ஜானகி அம்மா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தென்னிந்திய இசைக்குயில் என்று போற்றப்படும் எஸ் ஜானகியின் மறைவைத் தொடர்ந்து, அவரது இசை ரசிகர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

1 hr ago
user_Just Now Karimangalam
Just Now Karimangalam
Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
1 hr ago
722e62c1-b4fc-40b2-bfd0-4d3c313f899b

பிரபல தென்னிந்திய பாடகியான எஸ் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் இன்று காலமானார். தனது 88வது வயதில் அவர் காலமானார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரை இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ஜானகி அம்மா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தென்னிந்திய இசைக்குயில் என்று போற்றப்படும் எஸ் ஜானகியின் மறைவைத் தொடர்ந்து, அவரது இசை ரசிகர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    6 min ago
  • கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 53-வது வருட திருத்தல தேர்திருவிழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் திருத்தேர் பவனியை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் மந்திரித்து முறைப்படி துவக்கி வைத்தார்.
    1
    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 53-வது வருட திருத்தல தேர்திருவிழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் திருத்தேர் பவனியை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் மந்திரித்து முறைப்படி துவக்கி வைத்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    28 min ago
  • சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், போக்குவரத்து துறை அமைச்சருமான தமிழன் ஆ பார்த்திபன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    1
    சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், போக்குவரத்து துறை அமைச்சருமான தமிழன் ஆ பார்த்திபன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில், தாகம் காரணமாக தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று வழிமாறி கிராமத்திற்குள் புகுந்தது. கிராமப்பகுதிக்குள் மான் அங்கும் இங்கும் அலைந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள், அந்த மான் நாய்களிடம் சிக்காமல் இருக்கத் துரிதமாகச் செயல்பட்டு அதனை மீட்டனர். மான் மீட்கப்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் மீட்ட அந்தப் புள்ளி மானை ஒப்படைத்தனர். கிராம மக்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டிய வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மீட்கப்பட்ட அந்த மானைப் புதூர்நாடு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில், தாகம் காரணமாக தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று வழிமாறி கிராமத்திற்குள் புகுந்தது. கிராமப்பகுதிக்குள் மான் அங்கும் இங்கும் அலைந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள், அந்த மான் நாய்களிடம் சிக்காமல் இருக்கத் துரிதமாகச் செயல்பட்டு அதனை மீட்டனர்.

மான் மீட்கப்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் மீட்ட அந்தப் புள்ளி மானை ஒப்படைத்தனர். கிராம மக்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டிய வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மீட்கப்பட்ட அந்த மானைப் புதூர்நாடு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
    user_V ramani
    V ramani
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள "We The Leaders" அமைப்பின் சார்பில், போதை இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கரு நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அங்குள்ள பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    1
    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள "We The Leaders" அமைப்பின் சார்பில், போதை இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கரு நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அங்குள்ள பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    25 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.