கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

- குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் உறுதி சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வருகை தந்தார். அப்போது 36 ஏக்கர் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு கிராம மக்களை நேரில் சந்தித்து உறுதி செய்தார். ஐந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தி, குவாரி தடை, வழக்கு ரத்து, வேலைவாய்ப்பு கோரினர். அமைச்சர் செல்போன்கள் மீட்க உத்தரவிட்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.1
- கோவில் திருவிழாவை முன்னிட்டு பூத்தட்டு வீதி உலா நடைபெற்றது திருவாடானை கிழக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு பக்தர்கள் விரதம் இருந்து பூத்தட்டு எடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர் அவரை தொடர்ந்து பூத்தட்டு ஏண்டி பக்தர்கள் வந்தனர் வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்து அருள் பெற்று சென்றனர்1
- பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்1
- எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி நகை கடையில் தங்கம் "திருடிய" எலி - புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா - தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் கிழமை காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது. முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள். அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது. அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் *விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' கண்டன ஆர்ப்பாட்டம்!* விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' சார்பில் அரசு மருத்துவமனை முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விரைவாகத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 'தலைக்காய சிகிச்சை பிரிவை' உடனே தொடங்க வேண்டும். மருத்துவமனை உணவகத்தில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் அதிகப்படியான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' அமைப்பின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்1
- நேற்றைய தினம் K புதுக்குடி வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன வீரர்கள் கலந்து கொண்டார்கள்1