தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல்,வீடியோ வைரல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல். பக்தர்கள் அதிர்ச்சி. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பூசாரியாக முத்துக்குமார் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார். இக்கோவிலில் பூஜை செய்வதற்காக தங்களுக்கும் உரிமை உள்ளதாக பூசாரி முத்துக்குமாரின் பங்காளிகள் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முறையிட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற கொண்டிருக்கும் போது பக்தர்கள் முன்னிலையில் முத்துக்குமாரை அவரது பங்காளிகள் தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி நிலையில் இளையான்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில் சன்னதியில் பூசாரி தாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

- தமிழக முதலமைச்சர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அன்புமணி ராமதாஸ் தனது குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அன்புமணியின் குடும்பத்தினர் முதலமைச்சரை நெகிழ்ச்சியுடன் வரவேற்று நலம் விசாரித்தனர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் இந்தச் சந்திப்பில் ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.1
- தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசரின் குருபூஜையை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பந்தல் மூலம் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படுகிறது. இது கோடைக்கால வெப்பத்தில் பக்தர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.1
- புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!1
- தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.1
- இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.2
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். போதிய இருக்கை வசதியின்றி, அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.1
- தேனி வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் அருகே ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பொழுதுபோக்காய் அமையும்.1