தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் நஞ்சம்மாள் (45) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (40) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மாதேஷின் மனைவி கீதா, கூலிப்படையை ஏவி தனது கணவர் மற்றும் அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கீதா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரவணன், கீதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன், ஆறுமுகம், ரங்கநாதன், சந்துரு, சண்முகம் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதியமான்கோட்டை போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் வழங்கினர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் நஞ்சம்மாள் (45) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (40) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மாதேஷின் மனைவி கீதா, கூலிப்படையை ஏவி தனது கணவர் மற்றும் அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கீதா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரவணன், கீதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன், ஆறுமுகம், ரங்கநாதன், சந்துரு, சண்முகம் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதியமான்கோட்டை போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் வழங்கினர்.
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1
- பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் தருமபுரி ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. நேற்று மாலை சுமார் 7:15 மணியளவில் தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையை வந்தடைந்த இந்த ரயிலின் ஐந்தாவது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து, புகையுடன் தீப்பொறிகள் பறந்து தீ எரிவதை சில பயணிகள் கவனித்தனர். உடனடியாக பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ரயிலின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரேக் சக்கரத்துடன் ஒட்டிக்கொண்டதால் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக அதன் ரப்பர் பகுதி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. பயணிகளின் சாமர்த்தியத்தாலும், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையினாலும் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் ரயில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்ட பிறகே சேலம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.1
- தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பராமரிப்பு பணியாளர்கள், வீடு தோறும் கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முகாமில் அரசு சார்ந்த பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையினரும் தங்களது துறை சார்ந்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்ததுடன், தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களையும் பெற்றனர். மேலும், பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரிய நலன்கள், கல்வி உதவித்தொகை, விபத்து மற்றும் உயிர்காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்துவதன் அவசியம், மனித உயிருக்கு ஆபத்தான கைமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைத் தவிர்ப்பது, இயந்திரமயமான முறையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், தொழிலாளர் நலத் திட்டங்களில் பதிவு செய்யும் நடைமுறைகள், அரசின் பல்வேறு உதவிகளை எளிதில் பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக பயனடைந்தனர்.1
- தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவில் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா, தனது கணவர் சதீஷ்குமார் மீது துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக மனு அளித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கௌசல்யா தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவை மணந்து கொண்டார். ஆனால், கணவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக சுற்றித் திரிந்து வருவதாகவும், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சதீஷ்குமார் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் தில்லை நகருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர் பலமுறை கௌசல்யா மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், கௌசல்யா மற்றும் தனது மகள் என்றும் பாராமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கி துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக கௌசல்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கௌசல்யா தனது தாய் வீடான தேக்குப்பட்டு கிராமத்திற்கு வந்து தனது பெற்றோருடன் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். 27/07/2026 அன்று, தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது கணவர் சதீஷ்குமார் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.1
- சேலத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர் ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி அவர் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நீட் தேர்வுக்கு எதிராக ஆம்பூர் வழக்கறிஞர்கள் இன்று (ஜூலை 27) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.3
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கோவையை நோக்கி அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் ஒன்று, பொரத்தூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேகருக்கு அம்சவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த விபத்து குறித்து விரைந்து சென்ற பாலக்கோடு காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் நடந்த சொகுசு கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.1