மணப்பாறை அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கைது திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் பாஸ்கர் (57) என்பவர் அங்கு பயின்று வரும் சிறுமிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்ட ஆசிரியரை உடனே கைது செய்து இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி., காவியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் நேரில் சென்று பள்ளியில் பயிலும் சிறுமிகளிடமும், பெறாறோர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் போக்சோ சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பெற்றோர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி (55) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பாறை அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கைது திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் பாஸ்கர் (57) என்பவர் அங்கு பயின்று வரும் சிறுமிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர்
மற்றும் அந்த பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்ட ஆசிரியரை உடனே கைது செய்து இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி., காவியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள்
நேரில் சென்று பள்ளியில் பயிலும் சிறுமிகளிடமும், பெறாறோர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் போக்சோ சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பெற்றோர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி (55) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.1
- Post by ℬᴀʟᴀ ŧέcԩ1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!1