மாபெரும் தமிழ்க் கனவு-தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு-தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும் வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித் துறையுடன் இணைந்து 'மாபெரும் தமிழ்க் கனவு' என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை கடந்த ஆண்டுகளில் சிறப்பாக நடத்தியதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் 'மாபெரும் தமிழ்க் கனவு" என்ற பெயரிலான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு. குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும். உயர்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு. இலக்கியச் செழுமை. தமிழர் தொன்மை, சமூக சமத்துவம். மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனது பள்ளி பருவத்தில் நான் தமிழ் படிக்கவில்லை என்றாலும் நான் தமிழ் சார்ந்த நூல்கள். புத்தகங்களை அதிக அளவில் படித்தேன். தமிழை படிக்க படிக்க தமிழ் மீது அன்பும், ஒரு ஈர்ப்பும் வந்தது. நமது வாழ்க்கையில் தமிழ் மீதான தாக்கத்தினை வலுப்படுத்த வேண்டும். நாம் தமிழை நன்றாக படித்து புரிந்து கொள்வதுடன், அடுத்த தலைமுறைக்கு நல்ல முறையில் தமிழினை கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற தலைப்பில் உரையாற்றியதாவது. கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை. சமத்துவ வளர்ச்சி.சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையில் தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்தி வளமிக்க சமூகத்தை கட்டமைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சங்ககாலம் தொட்டே தமிழ் சமூகமானது கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும். என்ற திருக்குறளின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை உலகிற்கே எடுத்துரைத்துள்ளார். பண்டையக் காலத்தில் தமிழ் சமூகம் ஒரு முன்னேறிய சமூகமாக இருந்துள்ளது. குறிப்பாக மருத்துவம் மற்றும் கல்வியில் முன்மாதிரியாக தமிழ் சமூகம் விளங்கியுள்ளது. பெண்கள் கல்வி கற்பதற்காக இத்தலைமுறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக பெண்கல்வி உயர்ந்துள்ளது. ஆனால் பண்டைய தமிழ் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் கல்வி கற்றிருந்தனர். நம் தமிழ் சங்க இலக்கியங்களை 35 பெண்பாற்புலவர்கள் இயற்றியுள்ளனர்.மேலும்,கீழடி போன்ற அகழ்வாராச்சிகளில் மண்பாணைகளில் கல்வெட்டுகள் எழுதப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளதெனில் அந்த காலத்தில் விவசாயம் சார்ந்தவர் மற்றும் மண்பாண்ட தொழில்புரிவோர், கைத்தொழில் செய்பவர்கள் என அனைவரும் கல்வி கற்ற சமூகமாக இருந்திருக்க கூடும். இப்படிப்பட்ட உயர்ந்த சமூகத்தின் வழிவந்த நாம் தமிழ் மொழியின் பெருமையினை அடுத்துவரும் தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும்"என மருத்துவர் கு.சிவராமன் உரையாற்றினார். இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு "உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி", "தமிழ்ப்பெருமிதம்" ஆகிய இரு சிற்றேடுகள் வழங்கப்படும். "தமிழ்ப்பெருமிதம்" சிற்றேட்டிலுள்ள குறிப்புக்களை வாசித்து சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் "பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன்" எனப் பாராட்டியும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களைக் கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன்" எனப் பாராட்டியும் சான்றிதழ்களும் பரிசுப் புத்தகங்களும் வழங்கப்படும். மேலும் இந்நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக் காட்சி, "நான் முதல்வன்", வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ. வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முதல்வர் அரங்கபாரி. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர்.மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா,மாவட்ட நூலக அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- இரவின் மடியில்.1
- Post by Santhosh Santhosh3
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1