Shuru
Apke Nagar Ki App…
சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: தேனி மாவட்டம், சின்னமனூர் உழவர் சந்தையில் (மார்.10) கத்தரி ரூ.25/24, தக்காளி ரூ.16, வெண்டை ரூ.42, அவரை ரூ.65/54, கொத்தவரை ரூ.28, சுரை ரூ.10, புடலை ரூ.20, பாகல் ரூ.30, பூசணி ரூ.16/10, மிளகாய் ரூ.42/38, சேனை ரூ.30, கருணை ரூ.48, உள்ளி ரூ.36, பல்லாரி ரூ.26, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.24, முள்ளங்கி ரூ.18/16, பீன்ஸ் ரூ.85/50, கோஸ் ரூ.15, கேரட் ரூ.38, எலுமிச்சை ரூ.115, உருளை ரூ.25, இஞ்சி ரூ.64 க்கு விற்கப்படுகிறது.
Theni Godwin
சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: தேனி மாவட்டம், சின்னமனூர் உழவர் சந்தையில் (மார்.10) கத்தரி ரூ.25/24, தக்காளி ரூ.16, வெண்டை ரூ.42, அவரை ரூ.65/54, கொத்தவரை ரூ.28, சுரை ரூ.10, புடலை ரூ.20, பாகல் ரூ.30, பூசணி ரூ.16/10, மிளகாய் ரூ.42/38, சேனை ரூ.30, கருணை ரூ.48, உள்ளி ரூ.36, பல்லாரி ரூ.26, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.24, முள்ளங்கி ரூ.18/16, பீன்ஸ் ரூ.85/50, கோஸ் ரூ.15, கேரட் ரூ.38, எலுமிச்சை ரூ.115, உருளை ரூ.25, இஞ்சி ரூ.64 க்கு விற்கப்படுகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- மதுரை சரவணா கிச்சன் சார்பில் 10 ருபாய் மலிவு விலையில் மதிய உணவாக தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி விற்பனையை துவக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் இரவு உணவாக 20 ரூபாய் மலிவு லிலையில் சிக்கன் மற்றும் முட்டைப் பிரியாணி விற்பனை செய்து வரும் நிலையில், இன்று முதல் மதிய வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது. இன்று (9/3/2026 திங்கள்) கோ.புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவை வழங்கும் திட்டத்தை இன்று கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தன், அஜித்குமார், பாண்டிச்செல்வி, லியாகத் அலி, ஜாகிர் உசேன், விருமாண்டி, ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கடந்த 50 நாட்களாக மக்களின் ஏகோபித்த வரவேற்பில் நடைபெற்று வரும் சரவணா கிச்சன் மலிவு விலை உணவகத்தில் காலை நேரத்தில் வழங்கப்படும் மலிவு விலை இட்லி தேநீர் திட்டத்தில் சுமார் 30,000 பேரும், மலிவு விலை இரவு உணவு பிரியாணி வழங்கும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் 12,000 பேரும் ஆக இதுவரை சுமார் 42,000 பேர் பயன் பெற்றுள்ள நிலையில் இன்று முதல் 10 ரூபாய் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் சரவணா கிச்சன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- Post by RAJA news1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாதிற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்குள்ள சுமார் 15 விவசாயிகள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் இயங்கும் தனியார் விதை விற்பனை நிலையத்தின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்தனர். நடவு, உரம்,மருந்து, களை எடுத்தல் 120 நாட்கள் பராமரிப்புக்கு பின் தற்போது அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் போதிய விளைச்சலின்றி பதராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட தனியார் நெல் விதை விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அம்மச்சியாபுரம் விவசாயிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் விளைச்சலின்றி உள்ள நெல் மணிகளுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கி தங்கள் வாழ்வாதாரம் காத்திட கோரிக்கை விடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் நெல் விதை விற்பனை நிலையத்தால் வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட நெல் விதைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது. தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர். ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர். தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. ஸ்டாலின் அரசு மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி வருகிற 12-ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடை கண்டித்தும் நடைபெற்ற வரி மோசடி ஊழல் புகார் ஐந்து மாதங்களாக மாநகராட்சி மேயர் மண்டல தலைவர் நிலை குழு தலைவர் நியமிக்காமல் மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது இதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது. தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர். ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர். தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு என்றார்1
- திண்டுக்கல் மாவட்டம், மூலச்சத்திரம் அருகே நரிக்கல்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த காரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அவர்கள் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருள் இருப்பது தெரியவந்து குட்கா பொருளையையும், காரையும் பறிமுதல் செய்தனர் அந்த காரில் வந்த நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.1