Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம், உமராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட மாச்சம்பட்டு ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி கோமதி (40) மீது அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அர்ஜுனன் என்பவரின் மகன் ராஜா (50) என்பவர் நேற்று மே 29 அன்று தாக்குதல் நடத்தியுள்ளார். ராஜா என்பவரின் மகன் காமேஷ் மற்றும் கோமதியின் மகன் கிரி ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சண்டையை விலக்கச் சென்ற கோமதி மீது ராஜா தாக்கி, கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று மே 29 இரவு ராஜாவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Yuvaraj Yuvaraj
திருப்பத்தூர் மாவட்டம், உமராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட மாச்சம்பட்டு ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி கோமதி (40) மீது அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அர்ஜுனன் என்பவரின் மகன் ராஜா (50) என்பவர் நேற்று மே 29 அன்று தாக்குதல் நடத்தியுள்ளார். ராஜா என்பவரின் மகன் காமேஷ் மற்றும் கோமதியின் மகன் கிரி ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சண்டையை விலக்கச் சென்ற கோமதி மீது ராஜா தாக்கி, கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று மே 29 இரவு ராஜாவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்ட முகிலாலம் கிராமத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், ஒரு மூதாட்டிக்கு கை முறிவு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அறிந்த எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார்.1
- ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில், பரப வருடம் வைகாசி பதினாறாம் நாளை முன்னிட்டு விசாக தேர் வீதி உலா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தியராஜ் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.தென்னரசு ஆகியோர் இதில் பங்கேற்று, தேர் வீதி உலா நிகழ்ச்சியை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்தத் திருவிழா கடந்த 21ஆம் தேதி பிரம்மோற்சவ பூர்வ பூஜையுடன் தொடங்கியது. இன்று ஒன்பதாம் நாளாக யாக கலச பூஜை, உத்ஸவ மூர்த்தி அபிஷேகம், விசேஷ அலங்காரம், குஹாஸ்த்திர தேவர் புறப்பாடு, நவசந்தி பூஜை, உத்ஸவ சோடஷ உபாசார பூஜை, யாகரக்ஷை சமர்பித்தல் போன்ற பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ரதோரோஹாணம் புறப்பாடும் திருவீதி உலாவும் சிறப்பாக நடந்தேறின. அமைச்சர்கள் காந்தியராஜ் மற்றும் கே.தென்னரசு ஆகியோர் ஆலயத்தில் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு, பின்னர் தேர் திருவிழாவை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, "அரோகரா அரோகரா" என பக்தி கோஷங்களை எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த பொன்முடி என்பவர், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் கடந்த 19 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம், இவர் தவெக வெற்றியைக் கொண்டாடும் விதமாக சக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கியுள்ளார். போக்குவரத்து பணிமனைகள் இன்னமும் திமுக தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதால், பொன்முடியின் இந்தச் செயல் திமுக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பொன்முடியை பழிவாங்கும் நோக்குடன், அவரை திடீரென 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எந்தத் தவறும் செய்யாத தன்னை ஏன் இவ்வளவு தூரம் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு மாற்றியுள்ளீர்கள் என்று பொன்முடி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். தனக்கு நான்கு பெண் பிள்ளைகளும், உடல்நிலை சரியில்லாத மனைவியும் இருப்பதால், தினமும் சேலம் சென்று வர முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். பொன்முடிக்கு உரிய விளக்கம் அளிக்காத நிர்வாகம், பேருந்தை இயக்கும்போது ப்ளூடூத் அதிக சத்தமாக பயன்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, பழிவாங்கும் நோக்கிலேயே இந்த இடமாற்றத்தை செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், இடமாற்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரியும், பொன்முடி தனது குடும்பத்துடன் தர்மபுரி மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு தர்னாவில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லாநத்தம், துலுக்கனூர், அம்மம்பாளையம், புங்கவாடி மற்றும் மஞ்சினி ஆகிய இடங்களில் மாலை நான்கு மணி முதல் பலத்த மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடும் வெப்ப சலனம் நிலவி வந்த நிலையில், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த திடீர் மழையால் பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இந்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- இராசிபுரம் வட்டம், அத்தனூர் பேரூர், ஆலாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சத்துணவு வீதியில், சுற்றுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சந்து மாரியம்மன் கண் திறப்பு விழா மே 30 சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, அம்மனின் அருள் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர்.1
- நடிகரும் நண்பருமான அஜித் குமார், முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், நடிகை திரிஷாவும் நடிகர் அஜித் குமாருக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.1
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றுமான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் வைகாசி தங்க கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த சேவையை முன்னிட்டு, உற்சவர் பக்தோசிதப் பெருமாள் சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் பல வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டார். பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கருட வாகனத்தில் பக்தோசிதப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க, நான்கு மாட வீதிகளிலும் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீடுகள்தோறும் பக்தர்கள் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.1
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் கழகம் சார்பில் 6வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் இன்று வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பந்தாரஅள்ளி, கும்பாரஅள்ளி, மொட்டலூர், திண்டல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று, இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைப் பதிவு செய்தார். அப்போது, கழக எம்எல்ஏ-வை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், தொகுதி மக்களுக்கு தனது நன்றியினை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.1
- கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 323.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1