Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
RAJA
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மதுரை வீரன், மகாலட்சுமி மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவர் மீது, நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் தலா ₹9 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் மனுவின்படி, எரதிமக்கள்பட்டி கிராமத்தில் அரசு வேலைக்காக காத்திருந்த நபர்களிடம், மதுரை வீரன் மகாலட்சுமியை அறிமுகப்படுத்தியுள்ளார். மகாலட்சுமிக்கு நீதிமன்ற பதிவாளர் தெரிந்தவர் என்றும், ₹10 லட்சம் கொடுத்தால் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவார் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் 2021ஆம் ஆண்டு முன்பணமாக சுமார் ₹9 லட்சம் கொடுத்துள்ளனர். ஓராண்டுக்குள் வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கிளர்க் வேலை உறுதியாகிவிட்டதாக கூறி, உத்தரவு நகல் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகேந்திரன் என்பவர் வேலை தொடர்பான பயிற்சி அளிப்பார் என்று கூறி மகாலட்சுமி அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாகேந்திரனை சந்தித்தபோது, அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் சென்று வேலை வாங்குவதுபோல் செயல்பட்டு, மூன்று மாத சம்பளம் என ₹24,000 கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். பல மாதங்கள் கடந்தும் பணி நியமன அழைப்பு வராததால் சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், மகாலட்சுமி அளித்த உத்தரவு நகலை ஆய்வு செய்தபோது அது போலி ஆணை எனத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டு மதுரை வீரன் மற்றும் மகாலட்சுமியை அணுகியபோது, பணத்தைத் தராமல் அலைக்கழித்ததாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்தால் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை இழந்த 12 நபர்களும், தங்களை ஏமாற்றிய தவெக நிர்வாகி மதுரை வீரன், மகாலட்சுமி மற்றும் நாகேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் சில பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சேதமடைந்த வாகனங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்காமல், பேரூராட்சி வளாகத்திலேயே அப்படியே வைத்துள்ளனர். இதன் விளைவாக, வாகனங்கள் மேலும் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதேபோல, பல்வேறு வாகனங்களும் மற்றும் கைகளில் தள்ளும் வண்டிகளும் கூடச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த இந்த வாகனங்களை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஓட்டுநர் பணி ஒரு தெய்வீகமான பணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் ஓட்டுநர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோக நிலை, கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேவையான தகவல்களை வழங்கினர்.1
- மானாமதுரை கன்னார்தெரு செட்டிக்குளம் அங்கன்வாடி மையத்திற்காக கட்டப்பட்ட புதிய கட்டிடம், கட்டி முடிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, 35 குழந்தைகள் போதிய வசதிகளின்றி, பழைய பழுதடைந்த கட்டிடத்திலேயே கல்வி கற்று வருகின்றனர். பழைய கட்டிடத்தில் உடைந்த தரை, பழுதான மின்விசிறிகள் மற்றும் கடுமையான வெப்பம் போன்ற பிரச்சனைகளுடன் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- எல்லா மக்களே இப்படி 🙊😱 . . . . #food #handicappedsupport #handicappedvideo #handicappedfacebook #handicappedchannel #handicappedfoodreview #worldfood #volg #vlog1
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாதந்தோறும் வழங்கப்படும் மருந்து மாத்திரைகளைப் பெற பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகும் மக்கள், மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம், ஊழியர்கள் பற்றாக்குறை, மற்றும் முறையான வசதிகள் இல்லாததே இந்த காலதாமதத்திற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் இந்த மருத்துவமனையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்படாததாலும், மாதந்தோறும் பரிசோதனை செய்து மாத்திரை பெறுபவர்களுடன் புறநோயாளிகளுக்கும் ஒரே வரிசையில் மாத்திரைகள் வழங்கப்படுவதாலும் காத்திருப்பு நேரம் நீடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகவும், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அனைவரையும் முறையாக சிகிச்சை அளிக்காமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, மருத்துவமனையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையை உடனடியாக நீக்கி, நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை விரைந்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.1
- சிவகங்கை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை மற்றும் வரி பாக்கி செலுத்தாத கடைகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல எச்சரிக்கைகளுக்குப் பிறகும் பாக்கி செலுத்தாததால், நகராட்சி ஆணையரின் உத்தரவின்படி அதிகாரிகள் 139 கடைகளை சோதனையிட்டனர். இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக நான்கு கடைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டன. நகராட்சி நிர்வாகம், வாடகை வசூல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.1