Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் மாத கடப்பா பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் 14 வயது மகன் அஜய், எட்டாம் வகுப்பு மாணவன், நேற்று மாலை தனது வீட்டில் செடிகளுக்கு பயன்படுத்தப்படும் உர மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அஜய், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9:30 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Yuvaraj Yuvaraj
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் மாத கடப்பா பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் 14 வயது மகன் அஜய், எட்டாம் வகுப்பு மாணவன், நேற்று மாலை தனது வீட்டில் செடிகளுக்கு பயன்படுத்தப்படும் உர மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அஜய், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9:30 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from Tirupathur and nearby areas
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.06.2026) மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. புதூர்நாடு, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். இந்தக் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர், மேலும் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்க மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.1
- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி நடைபெற்றது. 38 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த சிலம்பாட்டப் பேரணியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகளான கோல்டன் சுரேஷ், தென்னரசு, வேலன், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.1
- தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிட்டேசம் பட்டி கிராமத்தில், பொது வழித்தடம் தொடர்பான தகராறில் விவசாயி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஜூன் 21 அன்று நடந்தது. கிட்டேசம் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (51) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (56) என்பவருக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், முனியப்பன் அந்த வழித்தடத்தில் கொட்டகை அமைக்க முயன்றபோது, மாரியப்பன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியப்பன் மற்றும் அவரது பேரன்களான திவாகர் (20) மற்றும் ஜெய் தீபன் (19) ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் மாரியப்பனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இது குறித்து மாரியப்பனின் மனைவி வாணி அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் மற்றும் அவரது இரண்டு பேரன்களையும் கைது செய்தனர்.1
- தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர் குமார் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், நகர செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் சிவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் இரத்த தானம் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், ரொட்டி, ஊட்டச்சத்து சாறு மற்றும் முதலமைச்சரின் புகைப்படம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, மூர்த்தி, மணி, தங்கராஜ், பச்சையப்பன், சக்திவேல், சிவா, சங்கர், ரஞ்சித், சஞ்சிவன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதி, இந்திரா, ஈஸ்வரி, கோவிந்தம்மாள், அத்துடன் சிலம்பு, குமார், தங்கராஜ், சேதுபதி, மணிகண்டன், சிவசண்முகம், சபரி, அரவிந்த், பிரகாஷ், நவாஸ் உள்ளிட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன் கொட்டாய் பகுதியில், வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த 50 வயதுடைய லட்சுமி என்ற பெண் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலை, இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இளைஞனைக் பென்னாகரம் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- காஞ்சிபுரம் பனிமலை சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, 300-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் ஊத்தங்கரை பேரூராட்சி தலைமை, தமிழக வெற்றி கழகம் மற்றும் LIONS BLOOD BANK hosur spicot ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா இந்த முகாமைத் துவக்கி வைத்து, ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் தாமோதிரன், பேரூர் கழகச் செயலாளர் ரமேஷ், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் இராமதுரை, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ்கண்ணன், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சக்திவேல், மத்தூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் மணிகண்டன், உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் கார்முகில் வேந்தன், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய பொருளாளர் வசந்த்குமார், ஊத்தங்கரை நகர துணைச் செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகப் பொறுப்பாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.1