பல்லடம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களை தொடர்ந்து கள்ளநோட்டு : காவல்துறையினர் அதிரடி... திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து, கடைகளில் மாற்றி வந்த கும்பலை பல்லடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து, மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே, கவுந்தப்பாடிபுதுாரை சேர்ந்த குமரேசன், 40, ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர், ஊத்துக்குளியை சேர்ந்த ராஜா, 38. இருவருக்கும் கடன் சுமை அதிகம் இருந்ததால், கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட முடிவு செய்தனர். அதற்காக, 'கலர் பிரின்டர ் ' வாங்கிய குமரேசன், அவரது வீட்டிலேயே கள்ள நோட்டுகளை அச்சடித்து நண்பர் ராஜா மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, 27, ஆகியோரிடம் கொடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். குமரேசன் பிரின்ட் எடுத்து தரும் நோட்டுகளை ராஜாவும், ஜெயசக்தியும் அருகில் உள்ள கடைகளில் கொடுத்து மாற்றி வந்துள்ளனர். பல்லடம் பகுதிக்கு கள்ள நோட்டுகளுடன் வந்த ராஜா-, ஜெயசக்தி, சேடப்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து, மளிகை பொருட்கள் வாங்கிச்சென்றுள்ளனர். அதேபோல் கே.அய்யம்பாளையம் பகுதி கடை ஒன்றிலும் கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்றியுள்ளனர். இதனை கண்டுபிடித்த கடை உரிமையாளர்கள், பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி "சிசிடிவி " காட்சிகளின் அடிப்படையில், பல்லடம் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ராஜா, ஜெயசக்தி ஆகிய தம்பதியினரை மடக்கிபிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து குமரேசனையும் மடக்கிபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கள்ளநோட்டு புழக்கம் பல்லடம் பகுதியில் பெரும் அதர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களை தொடர்ந்து கள்ளநோட்டு : காவல்துறையினர் அதிரடி... திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து, கடைகளில் மாற்றி வந்த கும்பலை பல்லடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து, மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே, கவுந்தப்பாடிபுதுாரை சேர்ந்த குமரேசன், 40,
ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர், ஊத்துக்குளியை சேர்ந்த ராஜா, 38. இருவருக்கும் கடன் சுமை அதிகம் இருந்ததால், கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட முடிவு செய்தனர். அதற்காக, 'கலர் பிரின்டர ் ' வாங்கிய குமரேசன், அவரது வீட்டிலேயே கள்ள நோட்டுகளை அச்சடித்து நண்பர் ராஜா மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, 27, ஆகியோரிடம் கொடுத்து
புழக்கத்தில் விட்டுள்ளார். குமரேசன் பிரின்ட் எடுத்து தரும் நோட்டுகளை ராஜாவும், ஜெயசக்தியும் அருகில் உள்ள கடைகளில் கொடுத்து மாற்றி வந்துள்ளனர். பல்லடம் பகுதிக்கு கள்ள நோட்டுகளுடன் வந்த ராஜா-, ஜெயசக்தி, சேடப்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து, மளிகை பொருட்கள் வாங்கிச்சென்றுள்ளனர். அதேபோல் கே.அய்யம்பாளையம் பகுதி கடை ஒன்றிலும் கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்றியுள்ளனர். இதனை கண்டுபிடித்த
கடை உரிமையாளர்கள், பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி "சிசிடிவி " காட்சிகளின் அடிப்படையில், பல்லடம் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ராஜா, ஜெயசக்தி ஆகிய தம்பதியினரை மடக்கிபிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து குமரேசனையும் மடக்கிபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கள்ளநோட்டு புழக்கம் பல்லடம் பகுதியில் பெரும் அதர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- பூண்டி நகராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாநகராட்சி குப்பை லாரிகள் வழிமறித்து சிறைபிடிப்பு... திருப்பூர் மாவட்டம்,பூண்டி நகராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உட்பட மொத்த கவுன்சிலர்களும் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் குப்பை லாரிகளை வழி மறித்து சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மூன்று மாதங்களாக தேங்கிய குப்பைகளை, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அம்மாபாளையம் பாறைக்குழியில் அடாவடியாக குப்பை கொட்டும் போக்கைக் கண்டித்தும், வரிசைகட்டி நிற்கும் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுக்கல் நத்தம் அருகே நூதன பண மோசடி தொடர்ந்து நத்தம் பகுதியில் பதட்டம் காவல்துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.3
- Post by Sangili.v1
- ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் *வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது* *ஜேசிபி வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வுக்கு ஆதரவு அளித்ததால் போராட்டம் முடிவு* ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வு, மற்றும் ஆயில், டீசல் விலை உயர்வினால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக இருந்த வாடகையை குறைந்தபட்சமாக 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரத்திற்கு 4,500 வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள், செங்கல் காளவாசல் தொழில், குவாரி தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று அவர்கள் நிர்ணயித்த வாடகையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது ஜேசிபி வாடகை கட்டணம் உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஜேசிபி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஜேசிபி உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என ஜேசிபி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது1
- கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் .. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை1
- தேனி தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 கூட்டம் நடந்தது தேனி பெரியகுளம் சாலை தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்டம் 2 நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பார்வையாளராக விஜய் சுந்தரம் வருகை புரிந்தார் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்3
- சேலம் மாநகரத்தில் வெளுத்து கட்டிய கனமழை! பொதுமக்கள் மகிழ்ச்சி..... சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 6 மணி அளவில் திடீரென மிதமான மழை பெய்யத் தொடங்கியது, நேரம் செல்லச் செல்ல தனது வேகத்தை கூட்டிய மலை கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த திடீர் கனமழையினால் மாநகரத்தில் முக்கிய பகுதிகளான அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், கெட்டிச்சாவடி, அழகாபுரம் பெரிய புதூர், ஐந்து ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் இந்த திடீர் மழை நாள் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மழையின் குளிரில் மகிழ்ச்சியடைந்தனர்.1
- திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என போராட்டம்1