புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் 29ம்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மின்தடை அறிவிப்பு மின்தடை அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் 29ம்தேதி சனிக்கிழமை ( 29.08.2026). மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.... திருமயம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 29ம்தேதி நடக்கிறது. இதையடுத்து இங்கிருந்து மின்னூட்டம் பெறும் திருமயம், கோனாபட்டு , ராங்கியம் ,விராச்சிலை, ராயவரம், கோட்டையூர், திருமயம் பெல் ஆகிய வழித்தடங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4 .00 மணிமுடிய மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் 29ம்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மின்தடை அறிவிப்பு மின்தடை அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் 29ம்தேதி சனிக்கிழமை ( 29.08.2026). மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.... திருமயம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 29ம்தேதி நடக்கிறது. இதையடுத்து இங்கிருந்து மின்னூட்டம் பெறும் திருமயம், கோனாபட்டு , ராங்கியம் ,விராச்சிலை, ராயவரம், கோட்டையூர், திருமயம் பெல் ஆகிய வழித்தடங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4 .00 மணிமுடிய மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி திருவரங்குளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆலங்குடி வம்பன் வடகாடு போன்ற பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக குளங்கள் குட்டைகளில் நீர்த்தேக்கம் மெதுவாக உயர்கிறது கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்பொழுது மழை பொழிகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.1
- நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.1
- மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.1