logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அஜித்குமார் கொலை வழக்கு: காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி – 6 மாதத்தில் விசாரணை முடிக்க உத்தரவு அஜித்குமார் கொலை வழக்கு: காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி – 6 மாதத்தில் விசாரணை முடிக்க உத்தரவு மதுரை, பிப். 16- மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளர் அஜித்குமார் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியான அஜித்குமார், 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை காவலர்களால் விசாரிக்கப்பட்ட போது கடுமையாக தாக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பு (CBI)க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அஜித்குமார் நகை எடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. “சட்டவிரோத உத்தரவுகளை காவல்துறையினர் மறுக்க வேண்டும்; நீதிமன்றம் பாதுகாப்பளிக்கும்” என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், கைது செய்யப்படாத 4 உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 day ago
user_Ponmaran Thekkathir Reporter
Ponmaran Thekkathir Reporter
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
1 day ago
344d53a2-ff15-4e23-9306-900a8c559f82

அஜித்குமார் கொலை வழக்கு: காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி – 6 மாதத்தில் விசாரணை முடிக்க உத்தரவு அஜித்குமார் கொலை வழக்கு: காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி – 6 மாதத்தில் விசாரணை முடிக்க உத்தரவு மதுரை, பிப். 16- மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளர் அஜித்குமார் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியான அஜித்குமார், 2025 ஜூன் 27ஆம் தேதி

c64ebe60-fdad-4c6d-8b09-476a1936df32

நகை காணாமல் போனது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை காவலர்களால் விசாரிக்கப்பட்ட போது கடுமையாக தாக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பு (CBI)க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அஜித்குமார் நகை எடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. “சட்டவிரோத உத்தரவுகளை காவல்துறையினர் மறுக்க வேண்டும்; நீதிமன்றம் பாதுகாப்பளிக்கும்” என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், கைது செய்யப்படாத 4 உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    3
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம்
மதுரை, பிப்.17-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    1
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று  (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    14 hrs ago
  • முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    1
    முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த  நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    1
    திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில்  கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது 
சுமார் 4 கோடியே 45 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு 
நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு   பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிலக்கோட்டை அரசு மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ  தலைமை வகித்தார்.
மேலும் இவ்விழாவில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான  சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு,
கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    1
    சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட   பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும்
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.