logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

8 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
8 hrs ago

மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்
    1
    வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும்  குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ்  சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.
    1
    வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார்.
மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல்‌ ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே‌ உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‌நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி‌ இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    1
    வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல்‌ ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே‌ உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‌நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி‌ இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர்
சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ​ ​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ​ தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். ​ இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. ​ மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ​ மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    1
    இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;
6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
​
​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
​
தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
​
இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
​
மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
​
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
​
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    11 hrs ago
  • திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    1
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    11 hrs ago
  • சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    1
    சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில்  வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை 
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான 
அரிசி பாறை, ஈத்தக்காடு,
தூவானம் அணை,
மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.
மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.
சுருளி அருவிப்பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.