ராஜாபிள்ளை சந்தில் உடனடி சாலை அமைக்காவிட்டால் பாஜக போராட்டம் – வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அறிவிப்பு. தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட ராஜாபிள்ளை சந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளதாக பாஜக முன்னாள் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார் இச்சாலையில் குடிநீர் இணைப்பு பணிக்காக மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு தோண்டிய நிலையில், அதன்பிறகு சாலை சீரமைக்கப்படாததால் மோடு-பள்ளம் உருவாகி, தெருவாசிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று (9-1-2026) பத்திரிகையாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உடனடியாக ராஜாபிள்ளை சந்துவில் சாலை அமைக்காவிட்டால் பாஜக சார்பில் பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் இன்று நேரில் ராஜாபிள்ளை சந்துவை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் மூன்று தினங்களுக்குள் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளாரஇதுகுறித்து வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், “சாலை இல்லாததால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட வர இயலாத சூழல் உள்ளது. மேலும் பாதாள சாக்கடை கசிவால் கழிவு நீர் வெளியேறி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி, மண்டல பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், லட்சுமிவேல் கனிக்கொரைரா, ஓபிசி சிறப்பு செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் ஜெயரூபி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி மற்றும் பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- தென்காசி மாவட்டம் கள்ளம்புளி ஆர்விஎஸ் மகளிர் சுய உதவி குழு நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு பெற 3வது வார்டு பொதுமக்களுக்கு டோக்கன் வழங்காமல் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் தான் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது இதனால் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு காய்கறிகள், கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதனால் சிவகுருநாதபுரம் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமாக காணப்பட்டது1