logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேண்பகதருசு மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை!.... செண்பகதருசு மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை! கன்னியாகுமரி மாவட்டம் செண்பகதருசு பகுதியில் சாலைகளின் இருபுறமும் அடர்ந்த முள் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்பட்டதால், அவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கடையல் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி நிர்வாகத்தின் தூய்மை பணியாளர்கள் இன்று செண்பகதருசு பகுதியில் உள்ள அடர்ந்த புதர்கள் மற்றும் முள் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், செண்பகதருசு பகுதியில் 85K பேருந்து சேவை அடிக்கடி ரத்து செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், நேற்று முதல் 85K பேருந்து சேவை சீராக இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Arukanimembers Team

4 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer விளவங்கோடு, கன்னியாகுமரி, தமிழ்நாடு•
4 hrs ago
e2ae3d45-ca19-46b4-a885-62f32d869de1

சேண்பகதருசு மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை!.... செண்பகதருசு மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை! கன்னியாகுமரி மாவட்டம் செண்பகதருசு பகுதியில் சாலைகளின் இருபுறமும் அடர்ந்த முள் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்பட்டதால், அவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கடையல் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி நிர்வாகத்தின் தூய்மை பணியாளர்கள் இன்று செண்பகதருசு பகுதியில்

f96f43ac-afa8-45fa-afc4-adb9569a145e

உள்ள அடர்ந்த புதர்கள் மற்றும் முள் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், செண்பகதருசு பகுதியில் 85K பேருந்து சேவை அடிக்கடி ரத்து செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், நேற்று முதல் 85K பேருந்து சேவை சீராக இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Arukanimembers Team

More news from தமிழ்நாடு and nearby areas
  • கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதில் விநாயகருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
    1
    கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதில் விநாயகருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
    user_Sathish
    Sathish
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சுசீந்திரம் பழைய ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு படையினர் நடத்திக் காட்டினார் வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கும் நிலையில் மலைச்சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரம் பழைய ஆற்றில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து மீட்பு படகுகள் மூலமும் கயிறு கட்டியும் தீயணைப்பு படையினர் செய்து காட்டினார்கள் இதனை அந்தப் பகுதியில் இருந்த சுற்றுலா பகுதிகள் பயணிகளும் பொதுமக்களும் பார்வையிட்டனர்
    1
    சுசீந்திரம் பழைய ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு படையினர் நடத்திக் காட்டினார்
வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கும் நிலையில் மலைச்சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரம் பழைய ஆற்றில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து மீட்பு படகுகள் மூலமும் கயிறு கட்டியும் தீயணைப்பு படையினர் செய்து காட்டினார்கள் இதனை அந்தப் பகுதியில் இருந்த சுற்றுலா பகுதிகள் பயணிகளும் பொதுமக்களும் பார்வையிட்டனர்
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
    1
    கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் 
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது 
விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    2
    தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கனிம வள வாகனங்கள் கேரளா செல்கிறதா ஆட்சியர் சோதனைச் சாவடிகளில் விசாரணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அரசு தடைவிதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து எல்லையோர பகுதிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று இரவு எல்லோரப் பகுதிகளில் உள்ள சோதனை சாதனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களிடம் கலிமாவள லாரிகள் கேரளா செல்கிறதா கேரளாவில் இருந்து லாரிகள் வருகிறதா என்பது குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்
    1
    கனிம வள வாகனங்கள் கேரளா செல்கிறதா ஆட்சியர் சோதனைச் சாவடிகளில் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அரசு தடைவிதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து எல்லையோர பகுதிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று இரவு எல்லோரப் பகுதிகளில் உள்ள சோதனை சாதனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களிடம் கலிமாவள லாரிகள் கேரளா செல்கிறதா கேரளாவில் இருந்து லாரிகள் வருகிறதா என்பது குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.