திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காக்காபள்ளம் என்ற இடத்தில் காரும் டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமா, தனது கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோருடன் பல்லடத்தில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தங்களது காரில் ஊத்துக்குளி வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் கார் முற்றிலும் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹேமா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காக்காபள்ளம் என்ற இடத்தில் காரும் டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமா, தனது கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோருடன் பல்லடத்தில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தங்களது காரில் ஊத்துக்குளி வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் கார் முற்றிலும் அப்பளம்போல்
நொறுங்கியது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹேமா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் வடக்குப்பேட்டை பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் காப்பக வனப்பகுதி சத்தியமங்கலத்திற்கு அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து உணவு தேடி வரும் குரங்குகள் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக மரத்தில் முகாமிட்டுள்ளன. இந்தக் குரங்குகள் காலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கடைகளில் இருக்கும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகள், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுகின்றன. மாலை நேரங்களில் மீண்டும் அந்த மரத்திற்கே திரும்பிச் சென்று தங்கும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தால், மக்கள் வீட்டின் கதவுகளைத் திறக்கவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.1
- கோவை மாவட்டம் எட்டிமடை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அந்த வனப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.1
- கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.1