தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில், போதை ஆசாமிகளின் தொடர் ரகளையால் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காவல்துறையின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசிக்கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு, இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்தபோது அரங்கேறியுள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்துக் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் பயங்கர ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளனர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகளையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்துள்ளது. அரசுப் பேருந்துக் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்குதடையின்றி, கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் தூக்கத்தால், போதை ஆசாமிகளின் கொட்டம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இனியாவது தூக்கம் கலைந்து, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

- தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜயின் 52வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சியினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தவெக சார்பில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவரின் கணவர் பொன்னுதுரை தலைமையில் கூடிய தவெகவினர், நடிகர் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. மேலும், தயிர்சாதம், லெமண் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட உணவுகளும் விருந்தில் பரிமாறப்பட்டன. முதல்வர் ஜோசப் விஜய்க்கு 52வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர, ஒன்றியப் பகுதி தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ரெங்கசமுத்திரம் கிராமத்தில், கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சமுதாயக் கூட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், இந்த கட்டிடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்காத காரணத்தால், தற்போது சமுதாயக் கூடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால், இந்தக் கட்டிடத்தை உடனடியாகச் சரிசெய்து, மீண்டும் கிராம மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.1
- தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சித் தொண்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாக பங்கேற்று பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார். இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.1
- மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 1ஆம் தேதி பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகாஷ், வெறும் 20 நாட்களிலேயே சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இதேபோல், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 18ஆம் தேதி பொறுப்பேற்ற நிஷாந்த் கிருஷ்ணா, மூன்று நாட்களிலேயே மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிர்வாக மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச் அதிகாரியான ஆகாஷ், தென்காசி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்ற அவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய ஆட்சியர், மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சாலையில் தேங்காய்களை உடைத்தனர். விவசாயிகள் விளைவிக்கும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாயும், உரிக்காத தேங்காய் ஒரு கிலோவுக்கு 30 ரூபாயும், கொப்பரை ஒரு கிலோவுக்கு 180 ரூபாயும் தமிழக அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விளைவிக்கப்பட்ட தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.1
- திண்டுக்கல் முள்ளிப்பாடி பகுதியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொத்தம் ஆயிரம் நபர்கள் உணவு பெற்று பயனடைந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீர்வளத்துரை மற்றும் ஊகவளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படியும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நகர கழக செயலாளர் அழகர் மற்றும் வடக்கு நகர செயலாளர் திருப்பதி ஆகியோரின் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக, மணப்பாறையில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 108 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மறுவாழ்வு மையம், அரசு போக்குவரத்து பணிமனை முன்புறம் உட்பட மணப்பாறையின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டு, கழக கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.1