Shuru
Apke Nagar Ki App…
சேலம் ஜான்சன் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா! தவெக மாநில மகளிர் அணி நிர்வாகி பங்கேற்பு..... சேலம் ஜான்சன் நகர் எட்டாவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கணபதி ஆலயத்தில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மகளிர் அணி இணை செயலாளர் பிரியா விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வணங்கினர்.
Rajendran
சேலம் ஜான்சன் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா! தவெக மாநில மகளிர் அணி நிர்வாகி பங்கேற்பு..... சேலம் ஜான்சன் நகர் எட்டாவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கணபதி ஆலயத்தில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மகளிர் அணி இணை செயலாளர் பிரியா விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வணங்கினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.1
- ராசிபுரத்தில் திடீரென பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர் 14.09.2026-RSP-HEAVY RAIN LEAVES RASIPURAM BUS STANDS FLOODED NEWS இராசிபுரம் இடி மின்னுடன் திடீரென பெய்த கனமழையால் ராசிபுரம் பேருந்து நிலையங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் இருச்சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கடும் அவதி ..... ராசிபுரத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால், சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி, மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- அதிமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது1
- பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாள் விழா தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கப்பட்டது தர்மபுரி செப் 15 தமிழகமெங்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இன்று தர்மபுரியில் திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக வந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ ஊர்வலமாக வந்து நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரரசு அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு சிலைக்கு தர்மபுரி திமுக நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.1
- பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்... ராசிபுரம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.1
- அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரியில் அதிமுக சார்பில் பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் டி ஆர் அன்பழகன் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது கட்சித் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என்று கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில்.. அதிமுக கழக இணை செயலாளர் டி கே ராஜேந்திரன் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல். ஒன்றிய கழக செயலாளர் என் ஜி ஏ சிவ பிரகாசம் பழனி, மதிவாணன் முன்னாள் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி. . தர்மபுரி நகர துணை செயலாளர். அறிவொளி. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருள்சாமி. நகர மன்ற உறுப்பினர்கள். சத்யா கார்த்திக் தேவா செந்தில். மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- விநாயகர் சதுர்த்தியில் மத நல்லிணக்கம் – விநாயகருக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் கற்பூர ஆரத்தி தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விநாயகர் சிலைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதனிடையே, தருமபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மோட்டார் மெக்கானிக் சங்கம் மற்றும் விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டு விநாயகர் சிலைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். மதங்களை கடந்து சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். இதில் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.1