Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடியில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலோடு தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்ற விழாவில் தமிழக எரிசக்தி மற்றும் சட்ட துறை அமைச்சர் தமிழகத்தின் துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார் விழா ஏற்பாடு தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி. ஆர்.சாமுவேல் ராஜ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மா.சுடலைமணி
தூத்துக்குடியில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலோடு தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்ற விழாவில் தமிழக எரிசக்தி மற்றும் சட்ட துறை அமைச்சர் தமிழகத்தின் துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார் விழா ஏற்பாடு தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி. ஆர்.சாமுவேல் ராஜ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.1
- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்1
- ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..1
- மீனவள் வலையில் சிக்கிய அரேகிய வகை நட்சத்திர ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் தொண்டி மகா சக்தி புரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு சொந்தமான படகில் முனிஸ் இரண்டு மீனவர்கள் தொண்டி மகாசக்திபுரம் கடலுக்குச் சென்று வலையை எடுத்த போது வலையில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் தங்களது வலையில் அடுத்தடுத்து இரண்டு ஆமைகள் சிக்கி இருந்தது அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக வலையை அறுத்து பத்திரமாக மீண்டும் கடலுக்குள் இரண்டு ஆமைகளையும் விட்டனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அது தடை செய்யப்பட்ட ஆமை என்பதால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படை அறிவுத்தலின்படி மீனவர்கள் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து மீட்டு கடலில் விட்டனர். வலையில் சிக்கிய ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம் வலை சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்1
- தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சேகர 30வது தோத்திர பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவிற்கு சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்தார் வடக்கு சபை மன்ற தலைவர் அருள்திரு ஜெபரத்தினம் கொடியேற்றி துவக்கி வைத்தார் சுரண்டை சீயோன் சேகர தலைவர் அருள்திரு ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல் ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1
- கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் சுவாமி வெள்ளி நகை திருட்டு மேல்பனையூர் கிராமத்தில் அருள்மிகு புலிக்குட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் பூசாரி அறையில் இருந்த பீரோ உடைத்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாடானை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்1