சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்
சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்
- தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கி உண்டு போராட்ட ஈடுபட உள்ளதாக 98 கிராம மக்கள் எச்சரிக்கை ஆண்டிபட்டி 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.1
- சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது. இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறை துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.1
- மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- தேமுதிக தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் சார்பில் இனிப்பு, அன்னதானம் வழங்கினர் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தேனி தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார் நகர செயலாளர் முருகராஜா முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியின் முன்னதாக தேமுதிக கட்சி கொடி ஏற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தேனி வடக்கு மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்4
- சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.1