Shuru
Apke Nagar Ki App…
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
Usha arun News
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
- Usha arun Newsமணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு🙏3 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- 0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது காலை 8:30 மணிக்கு மேல் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பொழிந்து வருகின்றது இந்த சாரல் மழை பொழிந்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுர்ச்சியான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது1
- Post by Deoprasad Say2
- போடி கிழக்கு ஒன்றியம் கூழையனூரில் பகுதியில் தைத்திருளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக தொழில் பிரிவு சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டனர் இதில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்1
- திருச்செங்கோடு தோக்கவாடி ஊராட்சி கே.எஸ். ஆர். கல்வி நகர் பகுதியில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மயில்சாமி என்பவரது வீட்டிலும்,ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் முத்துவேல் என்பவரது வீட்டிலும் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை ரொக்கம் மற்றும் மயில்சாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை 60 ஆயிரம் பணம் உண்டியல் காசுகள் வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் திருட்டு. ஊரக போலீசார் தீவிர விசாரணை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தீவிர சோதனை2
- Post by Chella Pandi1
- *மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா.* *பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரும் 15ஆம் தேதி பொங்கல் விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சார்பு நீதிபதி ராஜசேகர், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயமுருகன், குற்றவியல் நீதிபதி அசோக்குமார், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன், முன்னாள் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கரும்பு நட்டு வைக்க புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் 15 அடி நீளமுள்ள அலகு குத்தி பக்தர் ஆட்டம்.1
- *தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா - பாரம்பரிய முறைப்படி வந்த அரசு அலுவலர்கள்* *பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் முதல் முறை பானை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாவட்ட கலெக்டர்* தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது அனைத்து துறை அரசு அலுவலர்கள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார் தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டையில் வந்த மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார் பல்வேறு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும் முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்1