logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விநாயகர் சதுர்த்தி விழா கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நகரில் கோலாகல கொண்டாட்டம். முசிறியில் விநாயகர் சதுர்த்தி விழா. முசிறி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முசிறி கைகாட்டியில் களிமண்ணால் நேரடியாக செய்து கொடுக்கும் மண் விநாயகரை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் மண்ணுக்கு தான் சொந்தம் மண்ணில் இருந்து வந்தோம் மண்ணிற்கு செல்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் களிமண்ணால் செய்த விநாயகர் மூன்றாவது நாள் நீர் நிலைகளில் உள்ள நீரில் கரைக்கப்படுவது என்பது ஐதீகம். முசிறி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதி சிவன் விநாயகர் ஆதி சிவன் விநாயகர் பிள்ளையார்பட்டி விநாயகர், சிம்ம விநாயகர் உள்ளிட்ட சுமார் நான்கு அடி முதல் 10 அடி வரை உள்ள பலவகை விநாயகர் சிலைகள் வைத்தனர். சிலைகளுக்கு முன்பு வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம் கொழுக்கட்டை, பொரிகடலை, சுண்டல் போன்ற நெய்வேத்திய பொருட்கள் வைத்து மகா தீபாரதனை காட்டி சிறப்பு பூஜை செய்தனர். அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் சதுர்த்தி விழாவினை சிறப்பாக இசை முழங்க கோலாகலத்துடன் கொண்டாடினர்.

23 hrs ago
user_நா. முருகன்
நா. முருகன்
முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
23 hrs ago

விநாயகர் சதுர்த்தி விழா கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நகரில் கோலாகல கொண்டாட்டம். முசிறியில் விநாயகர் சதுர்த்தி விழா. முசிறி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முசிறி கைகாட்டியில் களிமண்ணால் நேரடியாக செய்து கொடுக்கும் மண் விநாயகரை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் மண்ணுக்கு தான் சொந்தம் மண்ணில் இருந்து வந்தோம் மண்ணிற்கு செல்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் களிமண்ணால் செய்த விநாயகர் மூன்றாவது நாள் நீர் நிலைகளில் உள்ள நீரில் கரைக்கப்படுவது என்பது ஐதீகம். முசிறி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதி சிவன் விநாயகர் ஆதி சிவன் விநாயகர் பிள்ளையார்பட்டி விநாயகர், சிம்ம விநாயகர் உள்ளிட்ட சுமார் நான்கு அடி முதல் 10 அடி வரை உள்ள பலவகை விநாயகர் சிலைகள் வைத்தனர். சிலைகளுக்கு முன்பு வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம் கொழுக்கட்டை, பொரிகடலை, சுண்டல் போன்ற நெய்வேத்திய பொருட்கள் வைத்து மகா தீபாரதனை காட்டி சிறப்பு பூஜை செய்தனர். அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் சதுர்த்தி விழாவினை சிறப்பாக இசை முழங்க கோலாகலத்துடன் கொண்டாடினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தொட்டியம் காட்டு புதன் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர் செல்வ விநாயகர் வலம்புரி விநாயகர் கணபதி உள்ளிட்ட பல்வேறு விதமான சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர் சிலைகள் முழுவதும் தொட்டியம் காட்டுப்புத்தூர் போலீசார் சேதம் ஏதும் ஏற்படாத வண்ணம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
    1
    தொட்டியம் காட்டு புதன் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்  செல்வ விநாயகர் வலம்புரி விநாயகர் கணபதி உள்ளிட்ட பல்வேறு விதமான சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர் சிலைகள் முழுவதும் தொட்டியம் காட்டுப்புத்தூர் போலீசார் சேதம் ஏதும் ஏற்படாத வண்ணம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
    1
    மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • ராசிபுரத்தில் திடீரென பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர் 14.09.2026-RSP-HEAVY RAIN LEAVES RASIPURAM BUS STANDS FLOODED NEWS இராசிபுரம் இடி மின்னுடன் திடீரென பெய்த கனமழையால் ராசிபுரம் பேருந்து நிலையங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் இருச்சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கடும் அவதி ..... ராசிபுரத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால், சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி, மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ராசிபுரத்தில் திடீரென பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர்
14.09.2026-RSP-HEAVY RAIN LEAVES RASIPURAM BUS STANDS FLOODED NEWS
இராசிபுரம்
இடி மின்னுடன் திடீரென பெய்த கனமழையால் ராசிபுரம் பேருந்து நிலையங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் இருச்சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கடும் அவதி .....
ராசிபுரத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றது.
இதனால் பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால், சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி, மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி
அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும்.
இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது.
கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்
    4
    புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி 
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்
    user_Prabhu
    Prabhu
    கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் தினம் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா திமுகவினர் மாலை அணிவித்து இடுப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைகாட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கருணை ராஜா கோட்டூர் முருகேசன், முசிறி நகரச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் தொட்டிய ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சப்தரிசி,மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிவ நடராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட், கார்த்திக், நகராட்சி கவுன்சிலர்கள் விஸ்வநாதன் முகேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் சண்முகராஜ், சிவசண்முகம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    1
    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் தினம் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா திமுகவினர் மாலை அணிவித்து இடுப்பு வழங்கி கொண்டாட்டம்.
முசிறியில் மறைந்த முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைகாட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கருணை ராஜா கோட்டூர் முருகேசன், முசிறி நகரச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் தொட்டிய ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சப்தரிசி,மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிவ நடராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட், கார்த்திக், நகராட்சி கவுன்சிலர்கள் விஸ்வநாதன் முகேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் சண்முகராஜ், சிவசண்முகம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்... ராசிபுரம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.
    1
    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்...

ராசிபுரம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆத்தூரில் தங்க கவசத்தில் அருள் பாலித்த வெள்ளப் பிள்ளையார். சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் இன்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னதாக பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்டு, பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தங்க கவசத்தில் வெள்ளப் பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்து வருகிறது.
    2
    ஆத்தூரில் தங்க கவசத்தில் அருள் பாலித்த வெள்ளப் பிள்ளையார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் இன்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னதாக பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்டு, பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தங்க கவசத்தில் வெள்ளப் பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்து வருகிறது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.