திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72,078 புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72,078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை ரூ.2.27 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும், ரூ.1.06 கோடி மதிப்பிலான நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றன. இதற்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பிரசன்னா, லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாஹீரா, குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மொல்லம்பட்டியில் புதிய ஊராட்சி கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபா்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72,078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,256 புதிய பகுதி நேர, முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சுமாா் 30 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு கல்லூரி இல்லாத நிலையில் தற்போது இரண்டு கலைக் கல்லூரிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. விருப்பாட்சியில் அரசு தொழில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. போட்டித் தோ்வுக்காக மாணவா்கள் படிக்க காளாஞ்சிப்பட்டியில் குளிா்சாதன வசதியுடன் ரூ.12 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- தேனியில் 13வது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி" அதன் மூலம்தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் * தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் காலவரையற்ற போராட்டத்தின் 13 வது நாளில், தேனி ஆட்சியர் அலுவலகம் முன், சாப்பாட்டு தட்டை கடண்டியல் அடித்து "ஓசை எழுப்பி " அதன் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தும் "கவன ஈர்ப்பு" போராட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த ஃபெப்ரவரி மூன்றாம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் இந்த "ஓசை எழுப்பும்" போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாய் அமைந்துள்ளது.1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.1
- பானி பூரி விற்பனையாளர் ஒருவர் தண்ணீரில் இருந்து உயிருள்ள எலியை அகற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி, 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. சாலையோரக் கடையில் ஒரு இளைஞர் சவால் வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் பெரும் சுகாதாரக் கவலைகளைத் தூண்டியுள்ளது1