காஞ்சிபுரம் : குறள் வாரவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் குறள்வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 2026 சனவரி 20 அன்று முற்பகல் காஞ்சிபுரம். ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறள் ஒப்பித்தல் போட்டி பொதுமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் அவரவர் தெரிந்த குறளை ஒப்பித்தல் செய்யலாம். குறள் போட்டிக்கான பரிசு ஒப்பித்தல் செய்த குறள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும். முதற்பரிசாக ரூ.5000/- வீதம் ஐந்து நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- வீதம் ஐந்து நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- வீதம் ஐந்து நபர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். குறள் ஓவியப்போட்டி பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டி 20.01.2026 அன்று மாலை 2.00 மணி முதல்3.00 மணி வரை காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். ஓவியப் போட்டி தலைப்பு ”திருக்குறள் சார்ந்த ஓவியம்” ஆக கட்டாயம் இருத்தல் வேண்டும். இதில் சிறந்த ஓவியங்களை காட்சிப்படுத்தப்படும். ஓவியப் போட்டிக்கு முதற்பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என மூன்று நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு குறள் வாரவிழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தர்மபுரி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார்.1
- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1
- *புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று மரியாதை செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக புத்தாம்பூர் தென்னங்குடி மாரியம்மன் ஆர்ச்சிலிருந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து ஆசிரியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து ஊர்வலமாக அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வந்தடைந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். பள்ளிப் பருவத்தில் அனுபவித்த சுவாரசிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று குத்து விளக்கேற்றி அனைவருக்கும் மேடையிலேயே பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவித்து நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்த அணைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பைட்: 1 பிரவீன்குமார் (தலைமைஆசிரியர்) பைட்:2 சந்திரசேகரன் (கணித ஆசிரியர்) பைட் : 3 வைதேகி (தமிழாசிரியர்) பைட் : 4 வினித்தா (முன்னாள் மாணவி) பைட் : 5 ஸ்ரீராம் சுந்தர் (முன்னாள் மாணவர்) பைட்: 6 சத்யா (முன்னாள் மாணவி)1
- புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனையடுத்து கணேஷ் நகர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- *மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்.* *அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள கள்ளிப்பட்டி, மாதம் பட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயிலும் 427 மாணவ, மாணவிகளுக்கு ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தங்கள் ஊர்களில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்து சென்றதாகவும், தற்போது தமிழக அரசு மிதிவண்டி கொடுத்துள்ளதால் இனி பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறையும் எனவும் மிதிவண்டி கொடுத்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மணன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசு, கைக்குடி சாமி, மலம்பட்டி சந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், கிளைச்செயலாளர் இளையராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பாலக்கோட்டில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் நிலுவை தொகை வழங்காவிட்டால் தொடர் போராட்டம் என எச்சரிக்கை1
- கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்1