தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு விரைவில் திட்ட அறிக்கை: துறைமுக ஆணையர் தகவல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை 4 முதல் 6 மாதங்களில் தயாரிக்கப்படும் என்று துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கேபிஎம்ஜி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த, துறைமுக செயல்முறை திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து - நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலர் விஜய்குமார் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். துறைமுகத்தின் முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில், ‘வ.உ.சி.துறைமுக ஆணையத்தில் சரக்கு போக்குவரத்தின் வளர்ச்சி வாய்ப்புகளை வெளிக்கொணர்தல்’ என்னும் தலைப்பில் அறிவியல் கையேடு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடல் சார் வணிக மேம்பாட்டு திட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் மூன்று கப்பல் தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 4.4 சதவீதம் கூடுதலாகும்.மேலும், பத்தாவது சரக்குத் தளம் ரூ.87 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் பசுமை துறைமுகமாக இந்த துறைமுகத்தை மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பசுமை ஹைட்ரஜன், பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட உள்ளன. தொடர்ந்து துறைமுகத்தில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றில் பல்வேறு பணிகள் மேம்படுத்தப்பட உள்ளன. 6 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம், 2 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 6 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் அமைக்கப்பட உள்ளது. பசுமை எரிவாயு மூலமாக இயங்கக்கூடிய கப்பல்களுக்காக, பசுமை எரிவாயு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. துறைமுக வளாகத்தில் 2029 ஆம் ஆண்டு பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலுக்குள் காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை இன்னும் 4 முதல் 6 மாதங்களில் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். .

- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- சுரண்டையிலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யும் பைப்பின் வால்வு பொருத்தப்பட்ட இடத்தில் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் கசிந்து வீணாக கழிவுநீர் ஓடையில் கலக்கிறது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- தாடிக்கொம்புவில் காணக்கிடைக்காத கண்கொள்ளா காணொளி காட்சி திண்டுக்கல் மாவட்டம்& வட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்2
- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்பு விநாயகர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோயிலை இடித்தனர்1