logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாமக்கல்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் பங்கு பெறும் நிகழ்வு நாமக்கல் மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகஸ்ட் 29 சனிக்கிழமை அன்று பங்கு பெறும் நிகழ்வுகள். இராசிபுரம் வட்டம் கூனுவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம் அங்காள பரமேஸ்வரி, பெரியாண்டிச்சி அம்மன் முப்பூஜை விழாவில் (மாலை 4:30 மணி) கலந்து கொள்ளுதல். மங்களபுரம் தாண்டாகவுடன் புதூர் சக்தி விநாயகர் சக்தி மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழாவில் (மாலை 5 :30 மணி) அளவில் கலந்து கொள்ளுதல். சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் தமிழ்நாடு 100 நாள் சாதனை விளக்க பொது கூட்டத்தில் (மாலை 6:30 மணி) கலந்து கொள்ளுதல். பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் பரமத்தி வேலூர் அண்ணாசாலை அருகில் தமிழ்நாடு அரசு 100 நாள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் (இரவு 8 மணி) கலந்து கொள்ளுதல். இராசிபுரம் வட்டம் அலவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள சின்ன மாரியம்மன், காமாட்சி அம்மன், செல்வ முத்துக்குமார சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் கலந்து கொள்ளுதல். இராசிபுரம் மலையம்பாளையம் கிராமத்தில் வீரகாரன் மகா கும்பாபிஷேக கோயில் விழாவில் (காலை 10 மணி) கலந்து கொள்ளுதல்.

6 hrs ago
user_கணேஷ் G
கணேஷ் G
Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
6 hrs ago
c334ee65-df18-40cb-899f-7171bedfce96

நாமக்கல்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் பங்கு பெறும் நிகழ்வு நாமக்கல் மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகஸ்ட் 29 சனிக்கிழமை அன்று பங்கு பெறும் நிகழ்வுகள். இராசிபுரம் வட்டம் கூனுவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம் அங்காள பரமேஸ்வரி, பெரியாண்டிச்சி அம்மன் முப்பூஜை விழாவில் (மாலை 4:30 மணி) கலந்து கொள்ளுதல். மங்களபுரம் தாண்டாகவுடன் புதூர் சக்தி விநாயகர் சக்தி மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழாவில் (மாலை 5 :30 மணி) அளவில் கலந்து கொள்ளுதல். சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் தமிழ்நாடு 100 நாள் சாதனை விளக்க பொது கூட்டத்தில் (மாலை 6:30 மணி) கலந்து கொள்ளுதல். பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் பரமத்தி வேலூர் அண்ணாசாலை அருகில் தமிழ்நாடு அரசு 100 நாள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் (இரவு 8 மணி) கலந்து கொள்ளுதல். இராசிபுரம் வட்டம் அலவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள சின்ன மாரியம்மன், காமாட்சி அம்மன், செல்வ முத்துக்குமார சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் கலந்து கொள்ளுதல். இராசிபுரம் மலையம்பாளையம் கிராமத்தில் வீரகாரன் மகா கும்பாபிஷேக கோயில் விழாவில் (காலை 10 மணி) கலந்து கொள்ளுதல்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    1
    சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு . சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
    1
    சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு 
நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு .
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    1
    மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..!
தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
  • கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம்
ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    நிருபர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • கோபிசெட்டிபாளையத்தை தூய்மையான நகரமாக மாற்றும் புதிய முயற்சியில் நகராட்சி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சியின் சிறிய தெருக்களில் உள்ள குறுகிய சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறுகிய தெருக்களில் உள்ள குப்பை மற்றும் சிறிய கால்வாய்களில் எளிதாக பணியாற்றும் வகையில், BOBCAT MACHINE களமிறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய Bobcat E18,E33, SKID குப்பை அள்ளும் இயந்திரத்திற்கு , தூர்வாரும் பணி இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் சாக்கடைகளை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, நீர் தேங்குவதைத் தடுப்பதன் மூலம் தூய்மையான, சுகாதாரமான மற்றும் அழகான கோபிச்செட்டிபாளையத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    2
    கோபிசெட்டிபாளையத்தை தூய்மையான நகரமாக மாற்றும் புதிய முயற்சியில் நகராட்சி 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சியின் சிறிய தெருக்களில் உள்ள குறுகிய சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
குறுகிய தெருக்களில் உள்ள குப்பை மற்றும் சிறிய கால்வாய்களில் எளிதாக பணியாற்றும் வகையில், BOBCAT MACHINE களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய Bobcat E18,E33, SKID குப்பை அள்ளும் இயந்திரத்திற்கு , தூர்வாரும் பணி
இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் சாக்கடைகளை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, நீர் தேங்குவதைத் தடுப்பதன் மூலம் தூய்மையான, சுகாதாரமான மற்றும் அழகான கோபிச்செட்டிபாளையத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    user_Vengadesh
    Vengadesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    21 hrs ago
  • நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
    1
    நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.