Shuru
Apke Nagar Ki App…
அத்தனூர்; திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு பயணம் இராசிபுரம் அத்தனூர் பேரூராட்சி சின்னப்பாவடி திடலில் இருந்து இன்று மார்ச் 9 காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற உள்ள 2.0 திமுக மாநாட்டிற்கு அத்தனூர் பேரூர் செயலாளர் கண்ணன் தலைமையில் இளைஞர் அணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாகமாக புறப்பட்டனர்.
கணேஷ் G
அத்தனூர்; திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு பயணம் இராசிபுரம் அத்தனூர் பேரூராட்சி சின்னப்பாவடி திடலில் இருந்து இன்று மார்ச் 9 காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற உள்ள 2.0 திமுக மாநாட்டிற்கு அத்தனூர் பேரூர் செயலாளர் கண்ணன் தலைமையில் இளைஞர் அணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாகமாக புறப்பட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன1
- *அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.* ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவின் இந்த அநீதியான தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஈரானின் மீறிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிசுபாலன் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அமைப்புகள் பங்கேற்றனர்.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையயூர் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து விசாயநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாணை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யாணைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- Post by RAJA news1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் தேன்கனிகோட்டைவட்டம், குந்து மாரணப்பள்ளி கிராமத்தில் பட்டியலிமைக்கள் பல வருடங்களாக சொந்தமாக வீட்டுமனை வீடு இல்லாமல் இருக்கின்றர்க் வீட்டுமனை வழங்க கோரி அரசுக்குமனு அளித்தும் இதுவரை அரசு நேரில் விசாரிக்க கூட வர வில்லை அதனால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வீட்டு மனையும்,கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.1
- பாலக்கோடு அருகே இரவு உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள்-சி.சி.டி.வி காட்சி வைரல்* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையூர் காப்புக்காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டு யானைகள புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யானையின் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மலையூர் வனப்பகுதிக்கு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளதாக பாலக்கோடு வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.1