Shuru
Apke Nagar Ki App…
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி நகர் மன்ற தலைவர் வாழ்த்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த நகர் மன்ற தலைவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவ இளங்கோ, மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 07.11.2026
Is ravichandran
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி நகர் மன்ற தலைவர் வாழ்த்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த நகர் மன்ற தலைவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவ இளங்கோ, மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 07.11.2026
More news from தமிழ்நாடு and nearby areas
- தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி நகர் மன்ற தலைவர் வாழ்த்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த நகர் மன்ற தலைவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவ இளங்கோ, மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 07.11.20264
- கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது ஏலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் இருந்த டயர் வெடித்தது இதில் நிலை தடுமாறிய தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1
- உடுமலை நேரு காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்!! திருப்பூர் உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ள 45 குழந்தைகளுக்கு, கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சரவணன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் டாஸ்மாக் கடைகள் தொழில்நுட்ப காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், திறந்துள்ள மற்ற கடைகளில் நீண்ட வரிசையில் மதுவை காத்திருந்து வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்.1
- கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.1
- சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .1
- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர். இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தீவிர வாகன சோதனை – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில், துடியலூர் C6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதையும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.1