logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வத்தலகுண்டு-ல் நள்ளிரவில் பயங்கரம் - ஓடும் பேருந்தில் மனைவி-மகள் இருவருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு - கணவர் கைது தேனி,தேவாரத்தை சேர்ந்த மணிக்குமார்(39) இவர் மனைவி சந்திரகலா(37) குடும்பப்பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் . நேற்று இரவு திருப்பூரில் இருந்து சந்திரகலா தனது மகள் சஞ்சனாஸ்ரீ(13) உடன் தேவாரத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மறைந்து இருந்த மணிக்குமார் பேருந்தில் ஏறி அரிவாளால் சந்திரகலா மற்றும் மகள் சஞ்சனா ஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் மணிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

5 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
5 hrs ago
ce3c739c-da7f-4017-be94-ebfeb629aef9

வத்தலகுண்டு-ல் நள்ளிரவில் பயங்கரம் - ஓடும் பேருந்தில் மனைவி-மகள் இருவருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு - கணவர் கைது தேனி,தேவாரத்தை சேர்ந்த மணிக்குமார்(39) இவர் மனைவி சந்திரகலா(37) குடும்பப்பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் . நேற்று இரவு திருப்பூரில் இருந்து சந்திரகலா தனது மகள் சஞ்சனாஸ்ரீ(13) உடன் தேவாரத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மறைந்து இருந்த மணிக்குமார் பேருந்தில் ஏறி அரிவாளால் சந்திரகலா மற்றும் மகள் சஞ்சனா ஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் மணிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல்‌ ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே‌ உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‌நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி‌ இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    1
    வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் மின் மோட்டார் மூலம் நீர் திருட்டு: 3-வது நாளாக ஜேசிபி இயந்திரம் மூலம் மின் மோட்டார், பைப், புட்வால்வுகள் பறிமுதல்‌ ஆட்சியர் அதிரடி ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே‌ உள்ள வைகை அணையின் உட்பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‌நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாய பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
நடைபெற்ற இந்த பணியில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் தலைமையில் உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் பரதன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஜேசிபி‌ இயந்திரம் மூலம் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்கள் அகற்றப்பட்டதோடு, தண்ணீரில் மூழ்கியிருந்த ஃபுட்வால்வுகள் மற்றும் பைப்புகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
வைகை அணையின் நீர்த்தேக்க உட்பகுதியில் இதுபோன்று சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ 
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி  மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
  • ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர்
சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    1
    ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை
சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கரூர், ஆகஸ்ட் 1: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது
என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர், ஆகஸ்ட் 1:
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    1
    சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில்  வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை 
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு சுருளி அருவிக்கு தண்ணீர் இன்றி வெறும் பாறையாக காட்சியளித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான 
அரிசி பாறை, ஈத்தக்காடு,
தூவானம் அணை,
மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.
மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.
சுருளி அருவிப்பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.