Shuru
Apke Nagar Ki App…
ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
ABDUL SALAM
ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்1
- கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.1
- திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது1
- குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் உறுதி சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வருகை தந்தார். அப்போது 36 ஏக்கர் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு கிராம மக்களை நேரில் சந்தித்து உறுதி செய்தார். ஐந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தி, குவாரி தடை, வழக்கு ரத்து, வேலைவாய்ப்பு கோரினர். அமைச்சர் செல்போன்கள் மீட்க உத்தரவிட்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.1
- ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் சௌந்தரபாண்டி 🌹 இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 🌹 அன்புச் சகோதரர்... ஆருயிர் தோழர்... இணைபிரியா நண்பர்... திரு. சௌந்தரபாண்டி முத்து நாயக்கர் அவர்களுக்கு கண்ணீர் கலந்த புகழ் வணக்கம். 🕯️ இரண்டு ஆண்டுகள் காலம் கடந்துவிட்டது; ஆனால் உங்கள் நினைவுகள் காலத்தின் மணலில் அழியவில்லை. எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாய் என்றும் நிலைத்திருக்கின்றன. நாகசிவா என்ற விதை இன்று ஆலமரமாய் நிழல் தருவதற்கு, இரவு பகல் பாராது வியர்வையை விதைத்த அமைதியான உழைப்பின் சிற்பி நீங்கள். நாகசிவா வெள்ளை மாளிகை கட்டிடங்களால் மட்டும் எழவில்லை; உங்கள் நம்பிக்கை, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை என்ற கற்களால் கட்டப்பட்டது. நண்பன் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் தந்தவர் நீங்கள்; வழிகாட்டியாக நடந்தவர், வாழ்க்கையை வழிநடத்திக் கற்றுத் தந்தவர். தனக்காக வாழ்வதைவிட, பிறருக்காக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று அமைதியாக வாழ்ந்து காட்டிய மாமனிதர் நீங்கள். உங்கள் புன்னகை ஒரு மலர்... 🌸 உங்கள் பணிவு ஒரு மணம்... 🌺 உங்கள் உதவி ஒரு நிழல்... 🌳 உங்கள் நட்பு ஒரு ஆயுள் வரம்... 🤝 மன்னர்கள் விட்டுச் சென்ற புகழைப் போல, நல்ல மனிதர்கள் விட்டுச் செல்லும் நினைவுகள்தான் காலத்தை வெல்லும். அந்த வரிசையில் என்றும் நிலைத்திருப்பவர் நீங்கள். உங்கள் உடல் மண்ணோடு கலந்திருக்கலாம்; ஆனால் உங்கள் சிந்தனைகள் எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் இன்னும் உயிருடன் நடந்து கொண்டிருக்கின்றன. "மலர்கள் வாடினாலும் மணம் மறைவதில்லை; மாமனிதர்கள் மறைந்தாலும் அவர்கள் செய்த நன்மை மறைவதில்லை." நீங்கள் ஏற்றிய உழைப்பின் தீபம் அணையாது எரியும்; நீங்கள் விதைத்த நம்பிக்கையின் விதைகள் தலைமுறைகள் வரை செழித்து வளரும். மண்ணுலகம் இருக்கும் வரை உங்கள் சேவையும், உங்கள் அர்ப்பணிப்பும், உங்கள் நட்பும், உங்கள் நினைவும் என்றென்றும் அழியாது. "இறைவன் உங்களை எங்களிடமிருந்து பிரித்திருக்கலாம்; ஆனால் எங்கள் இதயங்களிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது." 🌹 உங்கள் கரங்கள் விதைத்த நன்மைகள், இன்று ஆயிரம் இதயங்களில் நம்பிக்கையாக மலர்கின்றன. நீங்கள் கட்டிய வெற்றிப் பாதையில், நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறோம். உங்கள் குடும்பம் ஒருபோதும் தனிமையில் இல்லை... நாகசிவா குடும்பம் என்றும் உங்கள் குடும்பத்தின் உறவாகவும், உறுதுணையாகவும், தோளாகவும், வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும். நட்பை காலம் பிரிக்காது... உறவை மரணம் முடிக்காது... நல்ல உள்ளங்கள் பிரிந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற அன்பு என்றும் அழியாது. 🌺 மலர்கள் உதிரலாம்... மணம் உதிராது... மாமனிதர்கள் மறையலாம்... அவர்கள் புகழும், சேவையும், அர்ப்பணிப்பும் மண்ணுலகம் இருக்கும் வரை மறையாது. என்றும் எங்கள் இதயங்களில் வாழும் அன்பு நண்பர் திரு. சௌந்தரபாண்டி முத்து நாயக்கர் அவர்களுக்கு கண்ணீர் மல்கிய புகழ் வணக்கம். 🌹 அன்புடன், ❤️ நாகராஜ் பெரியசாமி பிள்ளை ❤️ உங்கள் ஆசிர்வாதத்துடன் தலைவர் வேட்பாளர்3