Shuru
Apke Nagar Ki App…
*இந்த வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதிற்கு நடிகர் திரு சத்தியராஜ் அவர்களுக்கு கோடி கும்பிடு போடுகிறேன்.* *இதைப் பார்த்தாவது ஒரு சில பேர் திருந்த வேண்டும்*
ஆ.கார்த்திக் (P F H R.)
*இந்த வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதிற்கு நடிகர் திரு சத்தியராஜ் அவர்களுக்கு கோடி கும்பிடு போடுகிறேன்.* *இதைப் பார்த்தாவது ஒரு சில பேர் திருந்த வேண்டும்*
More news from தமிழ்நாடு and nearby areas
- பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாபநாசம், 108 சிவாலயம், வங்காரம்பேட்டை, திருப்பாலைத்துறை, கபிஸ்தலம், ஆகிய இடங்களில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம் கலந்து கொண்டு மே தின கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கிளை நிர்வாகிகள் கலியமூர்த்தி, நவராஜ், புகழேந்தி, ராஜேந்திரன், மகாலிங்கம், பாஸ்கர் ,முருகானந்தம், பாலகுரு, சீனிவாசன், மணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- எட்டுக்குடி ஸ்ரீ முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால்காவடிகள், ரதக்காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த 11 நாள் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் நடைபெற்று வருவது பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரித்துள்ளது. தேரோட்டத்தைத் தொடர்ந்து தொடங்கிய பாலாபிஷேகம், பௌர்ணமி தினமான இன்று இடைவிடாமல் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.இந்த பெருவிழாவின் மற்றொரு சிறப்பாக, ரதக் காவடி எடுத்து வரும் பக்தர்களின் பக்தி வெளிப்பாடு அனைவரையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினரின் எட்டாவது ஆண்டு ரதக் காவடி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ரதக் காவடி ஊர்வலம், கொளப்பாடு, பையூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று, எட்டுக்குடி முருகன் கோவிலை சென்றடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்று பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.இந்த ரதக் காவடியை சுமந்த இளைஞர்கள், தாளம் மற்றும் பக்திப் பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி சென்றது திருவிழாவிற்கு தனி சிறப்பை சேர்த்தது. இந்நிலையில், வரும் மே 2ஆம் தேதி இரவு 11 மணி வரை கோவில் நடை சாத்தப்படாமல், 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.1
- நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு இன்று மே 1 சுப்பிரமணிய சுவாமிக்கு 56 மணிநேரம் தொடர்ந்து பாலபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பக்தர்கள் பால்காவடி வேப்பிலை காவடி மற்றும் பால்குடம் கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதனால் எட்டுக்குடி பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.1
- Post by MOULESH1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் திருவிழா சென்ற வாரம் பூ சொரிதலுடன் தொடங்கியது. இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி,சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் சித்திரை பவுர்ணமி பிரமோற்சவவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாளும் திருத்தேருக்கு எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரின் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். விழாவில் செயல் அலுவலர் சிவகுமார், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், ஆய்வாளர் லெட்சுமி , அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வசந்திசரவணன், ராஜேந்திரன், திருக்கோவில் கணக்கர் சங்கரமூர்த்தி, திருப்பாலைத்துறை சிவப்பேரவை நண்பர்கள் மற்றும் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1