Shuru
Apke Nagar Ki App…
MOULESH
More news from தமிழ்நாடு and nearby areas
- சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பழையபாளையத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கூற்றுப்படி இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு முன்னதாக இத்தளத்தில் காட்சியளித்ததாக புராண கூறப்படுகிறது.அதன்படி இன்று அதிகாலை சுவாமிக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு பின்னர், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர். விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை 7.05 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார். வெண்பட்டு ஆடை அலங்காரத்தில் எழுந்தருளிய அழகரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு “கோவிந்தா” என முழக்கமிட்டனர். பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஆற்றங்கரை முழுவதும் திருவிழா கோலமாக காணப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டனர்.1
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பாகவதமேளா தெய்வீக நாட்டிய கலைவிழா நடைப்பெற்றது. பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தீப ஒளியில் பிரகலாத சரித்திர நாடகம் மற்றும் ஆண்களே பெண்கள் வேடமணிந்து நாட்டிய நாடக கலைவிழாவில் காண்போர் வியக்கும் வகையில் நடனமாடினார். நிகழ்ச்சியில் திரளான நாட்டியக்கலை ரசிகர்களும், இசை கலைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நாட்டிய விழாவினை கண்டுகளித்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே வீரப்பூரில் பெரியகாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் இப்பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனுக்கு தீபமிட்டு வழிபட்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோயிலூர் ரோட்டில் ஆட்டோமொபைல் உரிமையாளர்கள் & பணியாளர் சங்கம் மே தின கொண்டாட்டம் இதில் 'சங்க உறப்பினர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும், காரைக்குடி தொழில்வணிகக்கழகம் தலைவர் கண்ணப்பன் அவர் கழகக் கொடி ஏற்றி வைத்து அவர் பேசிகையில் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் மேலும் தலைவர் செயலாளர் என்று வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் எந்த நேரத்தில் எந்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது என்று கூறினார் மேலும் வாழ்த்துரை திராவிட மணி அவர் பேசிகையில் மூன்றாம் ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன நீங்கள் ஒவ்வொருமே தொழில் வளம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்தார்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சான்றுகள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆத்தங்குடி பெருமாள் கைவண்ணத்தில் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது தலைவர் சீனிவாசன் துணைச் செயலாளர் நாகராஜன் செயலாளர் வெங்கட்நாராயணன் பொருளாளர் கமலஹாசன் துணைத் தலைவர் ரமேஷ் நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா கார்த்திக் ராஜா சந்திரசேகர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.1