சிவகங்கை மாவட்ட ஆட்டோமொபைல் உரிமையாளர்கள் & பணியாளர் சங்கம் மே தின விழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோயிலூர் ரோட்டில் ஆட்டோமொபைல் உரிமையாளர்கள் & பணியாளர் சங்கம் மே தின கொண்டாட்டம் இதில் 'சங்க உறப்பினர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும், காரைக்குடி தொழில்வணிகக்கழகம் தலைவர் கண்ணப்பன் அவர் கழகக் கொடி ஏற்றி வைத்து அவர் பேசிகையில் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் மேலும் தலைவர் செயலாளர் என்று வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் எந்த நேரத்தில் எந்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது என்று கூறினார் மேலும் வாழ்த்துரை திராவிட மணி அவர் பேசிகையில் மூன்றாம் ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன நீங்கள் ஒவ்வொருமே தொழில் வளம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்தார்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சான்றுகள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆத்தங்குடி பெருமாள் கைவண்ணத்தில் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது தலைவர் சீனிவாசன் துணைச் செயலாளர் நாகராஜன் செயலாளர் வெங்கட்நாராயணன் பொருளாளர் கமலஹாசன் துணைத் தலைவர் ரமேஷ் நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா கார்த்திக் ராஜா சந்திரசேகர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

- மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் ஏராளமான தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கினார்கள் .அதன் அடிப்படையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிணவறை எதிரே உள்ள நேதாஜி மெடி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் சார்பாக சுமார் ஆயிரம் பேருக்கு தக்காளி சாதம் ,தயிர் சாதம், புளி சாதம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி ஹரி கிருஷ்ணன் செய்திருந்தார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் திருவிழா சென்ற வாரம் பூ சொரிதலுடன் தொடங்கியது. இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி,சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1
- திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பழையபாளையத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கூற்றுப்படி இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு முன்னதாக இத்தளத்தில் காட்சியளித்ததாக புராண கூறப்படுகிறது.அதன்படி இன்று அதிகாலை சுவாமிக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு பின்னர், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மழை நின்ற பின்னரும் நீண்ட நேரம் வானத்தில் இடி மின்னல் நீடித்தது. ஆண்டிப்பட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் பாண்டியன் (வயது60) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது 2 மாடுகளை கொட்டத்தில் கட்டி வைப்பதற்காக பிடித்து சென்றார். அப்போது திடீரென்று ஏற்பட்ட மின்னல், பாண்டியன் மற்றும் மாடுகளின் மீது தாக்கியது. இதில் இரு பசு மாடுகளுடன் விவசாயி பாண்டியன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாடுகளுடன் விவசாயி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.1
- மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் இன்று இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்கள் முடி காணிக்கையை கொடுத்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக ஓபுளா படித்துறை பகுதியில் குடும்பத்துடன் வந்து குழந்தைகளுக்கு முடி காணிக்கையை கொடுத்து அழகரை தரிசித்து செல்கின்றனர். இதனால் அப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.1
- சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1