Shuru
Apke Nagar Ki App…
சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் கொடைக்கானல் முடங்கியது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.
Natarajan Pitchaimani
சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் கொடைக்கானல் முடங்கியது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- தேனி மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக பைரவ் என்ற மோப்பநாய் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் பைரவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தனர்.இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக உயிரிழந்த மோப்பநாய் பைரவ் இன்று காவல்துறை அணிவகுப்பு மரியாதை காவல்துறை அதிகாரிகள் மலர் வைத்து மரியாதை செய்து பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டனர்1
- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (மே.1) காலை நடைபெற்ற நிலையில் நண்பகலில் வைகை கரையோரமுள்ள ஓபுளா படித்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்வை முடித்து தங்களுடைய விரதத்தை நிறைவு செய்தனர் கொண்டனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர்.1
- சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- Post by G.thangarasu1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மழை நின்ற பின்னரும் நீண்ட நேரம் வானத்தில் இடி மின்னல் நீடித்தது. ஆண்டிப்பட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் பாண்டியன் (வயது60) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது 2 மாடுகளை கொட்டத்தில் கட்டி வைப்பதற்காக பிடித்து சென்றார். அப்போது திடீரென்று ஏற்பட்ட மின்னல், பாண்டியன் மற்றும் மாடுகளின் மீது தாக்கியது. இதில் இரு பசு மாடுகளுடன் விவசாயி பாண்டியன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாடுகளுடன் விவசாயி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.1
- மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் ஏராளமான தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கினார்கள் .அதன் அடிப்படையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிணவறை எதிரே உள்ள நேதாஜி மெடி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் சார்பாக சுமார் ஆயிரம் பேருக்கு தக்காளி சாதம் ,தயிர் சாதம், புளி சாதம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி ஹரி கிருஷ்ணன் செய்திருந்தார்.1
- Post by G.thangarasu1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே வீரப்பூரில் பெரியகாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் இப்பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனுக்கு தீபமிட்டு வழிபட்டனர்.1