Shuru
Apke Nagar Ki App…
G.thangarasu
More news from தமிழ்நாடு and nearby areas
- உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தில் சேர்ந்த கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து முல்லைப் பெரியாற்றின் கரையில் எதிர்சேவை நடைபெற்றது இதில் 10000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெறும் பகுதிகளில் சொக்கப்பர் கொளுத்தி கொண்டு செல்லப்பட்டனர் அதன் பின்பு கள்ளழகர் குதிரை வாகனத்தில் உப்புக்கோட்டை முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றனர். பின்னர் கள்ளழகர் சுவாமி மூலஸ்தான கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது அதேபோல் உப்பார்பட்டி சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றம் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தோ கோவிந்தோ என கோசமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதன்பின்பு ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமியை வைக்கப்பட்டுள்ளது. உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது1
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.1
- சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - ஆயிரம் வாழை மரம் காற்றில் சரிந்தும் தென்னை மரங்கள் வேரோடு சரிந்தும் சேதம் மாவட்ட நிர்வாகம் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மற்றும் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக பல்வேறு பகுதியில் தென்னை மற்றும் வாழை மரங்கள் காற்றில் சரிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது இந்த நிலையில் கொடுவிலார்பட்டி பகுதியில் நேற்று மழையுடன் அடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சுமார் 1000 வாழைக்கன்றுகள் காற்றில் சாய்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது, மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது விவசாய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்ததாக கூறும் தோட்டத்து உரிமையாளர் தங்களுக்கு வாழை நல்ல மகசூல் தரும் நேரத்தில் இந்த சேதம் ஏற்பட்டதால் கடும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக கூறுகின்றனர் இதுகுறித்து மாவட்ட வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து பார்வையிட்டு தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்1
- Post by தமிழ்நாடு1
- இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு எட்டப்படவில்லை ஆகவே இன்று தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- பாசமாVsவெறியா !!! விஜயின் ரசிகர்களின் வெடி கலந்த பாசம் பெண்களின் ஆவேசம் !!!1
- திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்1