Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 5 மற்றும் 10 ல் கழிவுநீர் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் உள்ளதன் காரணமாக கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு அதிக துன்நாற்றம் வீசுகிறது ஆகவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Gobi Ponnusamy
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 5 மற்றும் 10 ல் கழிவுநீர் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் உள்ளதன் காரணமாக கழிவுநீர் தேங்கியுள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு அதிக துன்நாற்றம் வீசுகிறது ஆகவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது2
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- இரவு வணக்கம்1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜம்மாள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, அதுல்யா ரவி, பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் விக்னேஷ், நாட்டுப்புற கலை பாடல் பாடகர் அந்தோணி தாசன் கலைக்குழு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே எஸ் ஆர் கல்வி நிறுவன அதிகாரிகள் முதல்வர்கள் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்1
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்தையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் எடப்பாடி,கொங்கணாபுரம்,சின்னப்பம்பட்டி,சங்ககிரி,ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வளர்க்க ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 20000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.20000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 18000 ஆடுகள் இன்று விற்பனையானது.சராசரியாக சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூபாய் 6,800 முதல் 8,000 வரையும், 20 கிலோ எடை உள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய்கள் ரூபாய் 12,600 முதல் 16,500 வரை விலைபோனது . அதேபோல 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 26 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று மட்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.இதனால் ஆடு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜீட்ஸ் கிரிக்கெட் அகாடமி – டிசிசி (JEET’S CRICKET ACADEMY – DCC) தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவினை தாராபுரம் தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வி.செந்தில்குமார் & நகரச் செயலாளர் முருகானந்தம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.1