பொங்கல் பண்டிகை முன்னிட்டு 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை. தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்தையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் எடப்பாடி,கொங்கணாபுரம்,சின்னப்பம்பட்டி,சங்ககிரி,ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வளர்க்க ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 20000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.20000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 18000 ஆடுகள் இன்று விற்பனையானது.சராசரியாக சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூபாய் 6,800 முதல் 8,000 வரையும், 20 கிலோ எடை உள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய்கள் ரூபாய் 12,600 முதல் 16,500 வரை விலைபோனது . அதேபோல 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 26 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று மட்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.இதனால் ஆடு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

- தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்1
- தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி 27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"1
- நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது1
- உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- இரவு வணக்கம்1
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.2