Shuru
Apke Nagar Ki App…
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி வேட்பாளர் நாகம்மாள் இன்று மனு தாக்கல் செய்தார்.
OREDESAM REPORTER
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி வேட்பாளர் நாகம்மாள் இன்று மனு தாக்கல் செய்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்2
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனபுறம் கே .பழனி அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ பெருமந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜான், நகர செயலாளர் போந்தூர் மோகன், கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார் , கழக செயலாளர் இறையூர் முனுசாமி, மாவட்ட பிரதிநிதி சார்லஸ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், கொளத்தூர் கிளை செயலாளர் பிச்சிமணி, மண்ணூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிவிச்செல்வன், தண்டலம் கவுன்சிலர் கோபிநாத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்டம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வருகின்ற ஆறு ஏழு எட்டு தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு ஒட்டி கொடி மற்றும் குறித்தோலை பவனி கீழ வீதியில் உள்ள மக்கள் மன்றத்திலிருந்து பங்குதந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் தொடங்கி கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள், அன்பியங்கள், பங்குஇறைமக்கள், பங்கு கிளை கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும் உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது1
- Post by Dharmaraj P1
- தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் நடைபெற்ற வருகின்ற 23/04/26 அன்று நடைபெற உள்ள சட்டமன்றபொது தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ,தேசியஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமார் அறிமுகப்படுத்தி ஆலோசனைவழங்கியும் செயல்வீரர்கள் வீராங்கனைகள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது1