logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

2 hrs ago
user_ரமேஷ்குமார்
ரமேஷ்குமார்
பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
2 hrs ago

NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.

சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்

ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில்

செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    1
    பாட்டியின் சாதனை.
சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    4
    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 
10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். 
இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் நிகழ்வாக பொதுக்கூட்டமானது ஈரோடு மெயின் ரோடு சீதா கல்யாண மண்டபம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல்குமார் ஆகியோர் முன்னிலையில் கீதா ரவீந்திரன்,டாக்டர் சித்ரா கணேசன், லோகிதா வெள்ளியங்கிரி, வழக்குரைஞர் கீர்த்தனா சித்தார்த்,ஸ்ரீவித்யா சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இப்பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் சிறப்புரையும், திரௌபதி பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் எழுச்சியுரையும் ஆற்றினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, டாக்டர்.ரவீந்திரன்,சுபி தளபதி, பொன்மணி கார்த்தி, டாக்டர் ராஜா, சிற்பி மகேஸ்வரன், சக்திவேல், மாதேஸ் சிவா, காகுத் கார்த்திகேயன், சிவக்குமார், சுரேந்தர் Ex Army, மனோஜ்குமரன்,முரளிதரன், சதிஸ்குமார், பொன் விஸ்வநாதன் நாடார், மகாலிங்கம் ராமசாமி, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு வரவேற்புரையும், முடிவில் நகர பொதுசெயலாளர் மதன்குமார் நன்றியுரையும் ஆற்றினர். அதனைத் தொடர்ந்து விசர்ஜன் விநாயகர் திருமேனிகள் ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க பெண்கள் கொடி அணிவகுப்புடன் தெய்வம், ஆஞ்சநேயர் வேடம், நடன குதிரை ஆட்டம், கம்பீர யானை, காந்தார பஞ்சுர்லி கடவுள் வாராகி வாகன ரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பெண்கள் முளைப்பாரி, ஒளிரும் விளக்குகள், பூ கரக கலசம் ஆகியவற்றை எடுத்து முன் செல்ல 2007 பெண்கள் விசர்ஜன விநாயகர் திருமேனிகளை கையில் எடுத்து பிரமாண்டமான ஊர்வலமாக அணிவகுக்க விசர்ஜன விநாயகர் திருமேனிகள் ஊர்வலத்தை ஆன்மீகச் செம்மல், தொழிலதிபர் கே.வி. சோமசுந்தரம் மரக்கடை உரிமையாளர் ஜி.எஸ். நடராஜன் மற்றும் தொழிலதிபர் திருநாவுக்கரசு ஆகியோர் காவிக் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 2007 பெண்கள் விநாயகர் திருமேனி ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஊர்வலமானது சீதா கல்யாண மண்டபத்திலிருந்து தொடங்கி ஜீவா செட், புதுப்பாளையம் பிரிவு, பஸ்நிலையம், சிக்னல், மார்க்கெட், எம்.ஜி.ஆர் சிலை, கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சென்று நஞ்சை புளியம்பட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியின் கோபி நகர தலைவர் கருப்புசாமி, நகர செயலாளர்கள் மௌலி, அர்ஜீன், சபரி நகர துணைத்தலைவர்கள் கோபால், கருப்புசாமி, நாகராஜ், நகர பொருளாளர் மனோஜ்குமார், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் பாஸ்கர், தங்கவேல் சுஜேஸ், சௌந்தர், முரளி, ரவி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.
    4
    கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் நிகழ்வாக பொதுக்கூட்டமானது ஈரோடு மெயின் ரோடு சீதா கல்யாண மண்டபம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல்குமார் ஆகியோர் முன்னிலையில் கீதா ரவீந்திரன்,டாக்டர் சித்ரா கணேசன், லோகிதா வெள்ளியங்கிரி, வழக்குரைஞர் கீர்த்தனா சித்தார்த்,ஸ்ரீவித்யா சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இப்பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் சிறப்புரையும், திரௌபதி பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் எழுச்சியுரையும் ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, டாக்டர்.ரவீந்திரன்,சுபி தளபதி, பொன்மணி கார்த்தி, டாக்டர் ராஜா, சிற்பி மகேஸ்வரன், சக்திவேல், மாதேஸ் சிவா, காகுத் கார்த்திகேயன், சிவக்குமார், சுரேந்தர் Ex Army, மனோஜ்குமரன்,முரளிதரன், சதிஸ்குமார், பொன் விஸ்வநாதன் நாடார், மகாலிங்கம் ராமசாமி, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு வரவேற்புரையும், முடிவில் நகர பொதுசெயலாளர் மதன்குமார் நன்றியுரையும் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து விசர்ஜன் விநாயகர் திருமேனிகள் ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க பெண்கள் கொடி அணிவகுப்புடன் தெய்வம், ஆஞ்சநேயர் வேடம், நடன குதிரை ஆட்டம், கம்பீர யானை, காந்தார பஞ்சுர்லி கடவுள் வாராகி வாகன ரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பெண்கள் முளைப்பாரி, ஒளிரும் விளக்குகள், பூ கரக கலசம் ஆகியவற்றை எடுத்து முன் செல்ல 2007 பெண்கள் விசர்ஜன விநாயகர் திருமேனிகளை கையில் எடுத்து பிரமாண்டமான ஊர்வலமாக அணிவகுக்க விசர்ஜன விநாயகர் திருமேனிகள் ஊர்வலத்தை ஆன்மீகச் செம்மல், தொழிலதிபர் கே.வி. சோமசுந்தரம் மரக்கடை உரிமையாளர் ஜி.எஸ். நடராஜன் மற்றும் தொழிலதிபர் திருநாவுக்கரசு ஆகியோர் காவிக் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 2007 பெண்கள் விநாயகர் திருமேனி ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஊர்வலமானது சீதா கல்யாண மண்டபத்திலிருந்து தொடங்கி ஜீவா செட், புதுப்பாளையம் பிரிவு, பஸ்நிலையம், சிக்னல், மார்க்கெட், எம்.ஜி.ஆர் சிலை, கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சென்று நஞ்சை புளியம்பட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியின் கோபி நகர தலைவர் கருப்புசாமி, நகர செயலாளர்கள் மௌலி, அர்ஜீன், சபரி நகர துணைத்தலைவர்கள் கோபால், கருப்புசாமி, நாகராஜ், நகர பொருளாளர் மனோஜ்குமார், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் பாஸ்கர், தங்கவேல் சுஜேஸ், சௌந்தர், முரளி, ரவி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.
    user_Vengadesh
    Vengadesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    2
    ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். 
இக்கண்திருஸ்டி கணபதி
இராஜகணபதியாய்  சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. 
இன்று கணபதிக்கு  சிறப்புபூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ​ தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
​
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். 
தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    1
    கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது.
காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 
கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    55 min ago
  • ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில்
விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம்
திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர்.  
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.